Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காவிரி மேலாண்மை வாரியம்... தமிழக அரசின் தேர்வு சரியா?

                 

காவிரி மேலாண்மை வாரியத்தின் உறுப்பினராக தமிழக அரசின் சார்பில் பொறியாளர் ஆர். சுப்ரமணியன் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இவர் சரியான தேர்வுதானா ? காவிரியில் இவரது அனுபவம் என்ன?  இது குறித்து நிபுணர்கள் என்ன நினைக்கிறார்கள். இதுகுறித்து தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கத்தின் செயலாளரும் பொதுப்பணித்துறை முன்னாள் தலைமை பொறியாளருமான வீரப்பனிடம் பேசினோம். " தமிழ்நாடு சார்பில் காவிரி மேலாண்மை வாரியத்தின் உறுப்பினராக சுப்ரமணியன் நியமிக்கப்பட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. சுப்ரமணியன் மிகவும் நேர்மையானவர். அவரை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது. காவிரி விவகாரத்தில் நீண்ட அனுபவம் பெற்றவர். காவிரி நதிநீர் தொடர்பான தொழில்நுட்பங்களில் சிறந்த திறமையாளர். மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் குறித்த தகவல்களை தமிழ்நாட்டின் சார்பில் இவரை தவிர வேறு யாராலும் முழுமையாக, துல்லியமாக எடுத்துரைக்க முடியாது. உச்சநீதிமன்றத்தில் காவிரி தொடர்பான வழக்குகளில் தமிழகத்தின் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு தகவல்கள் வழங்கி வருகிறார். தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் தலைமை  பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர்,  மறு பணியமர்வு அடிப்படையில் 2002-ம் ஆண்டு காவிரி தொழில்நுட்ப கழகத்தின் துணை தலைவராக நியமிக்கப்பட்டார். 2010-ம் ஆண்டிலிருந்து அக்கழகத்தின் தலைவராக பணியாற்றி வருகிறார் சுப்ரமணியன். நிச்சயமாக அவரால் தமிழ்நாட்டுக்கு பலன் கிடைக்கும்" என நம்பிக்கை தெரிவித்தார் வீரப்பன்.

- கு.ராமகிருஷ்ணன்.

எடிட்டர் சாய்ஸ்