Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல்வர் பற்றி வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை!. ச.ம.க கூட்டத்தில் தீர்மானம்

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமையில் கூட்டப்பட்ட கட்சியின்  ஆலோசனை கூட்டத்தில், தற்போதைய மாநில மற்றும் தேசிய பிரச்னைகளைப் பற்றி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


இந்தத் தீர்மானத்தில், முதல்வர் பூரண குணமடையவும், தொடர்ச்சியாக முதல்வர் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பி வருவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், காவிரி பிரச்னையில் மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. 

உள்ளாட்சி தேர்தலிலும், இடைத்தேர்தல்களிலும் ச.ம.க, அதிமுகவின் கூட்டணியாக செயல்படும் என்றும், ஜல்லிக்கட்டு மற்றும் எல்லை பிரச்னைகளில் மத்திய அரசு உரிய தீர்வை எட்ட வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ