Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உ.பி-யில் ஆட்சியைப் பிடிக்க பாஜகவின் சென்டிமென்ட் பிளான் !

த்தரப்பிரதேசத்தில் சட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள நிலையில், அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பாஜக-வைப் பொருத்தவரை, உத்தரப்பிரதேசத்தில் இந்த முறை வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற தீவிரத்தில் உள்ளது. கூடவே காங்கிரஸும் இழந்த இடத்தைப் பிடிப்பதில் மும்முரமாக உள்ளது. தற்போது ஆட்சியில் உள்ள சமாஜ்வாதி கட்சியும் தன் பங்குக்கு தேவையானதைச் செய்து வருகிறது.

ஏன் உத்தரப் பிரதேசம்?

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்திலிருந்து தான் அதிக அளவிலான மக்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்பவர்களுக்கு, அடுத்து வரும் மக்களவை தேர்தலில் கணிசமான பலாபலன்கள் இருப்பதால் உத்தரப்பிரதேச கோட்டையைப் பிடிக்க, இந்த மூன்று கட்சிகளும் போட்டிபோடுகின்றன. இந்தக் கட்சிகள் மட்டுமல்லாது, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் ஆட்சியைப் பிடிப்பதில் மும்முரம் காட்டி வருகிறது. இதற்காக பல அரசியல் விளையாட்டுகளையும் கட்சிகள் அரங்கேற்றி வருகின்றன.

இந்த நிலையில் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லி சொல்லித்தானே மோடியை முன்நிறுத்தி மக்களவைத் தேர்தலில் ஜெயித்தார்கள், பிறகு ஏன் இதுவரை பாஜக முதல்வர் வேட்பாளரை அறிவிக்கவில்லை? என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இதற்கு உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா பதில் அளித்துள்ளார். 

சென்டிமென்ட் வெற்றி!

"பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கப் போவதில்லை. பாஜகவின் ஒவ்வொரு கடைநிலை ஊழியனும் முதல்வர் வேட்பாளர்தான். இதற்கு முன் நடந்த அஸ்ஸாம் மற்றும் டெல்லி தேர்தல்களில் முதல்வர் வேட்பாளர்களை அறிவித்தோம். அஸ்ஸாமில் மட்டுமே ஜெயித்தோம். டெல்லியில் வெற்றி கைகூடவில்லை. 

ஆனால் அதே நேரம், ஹரியானா, மஹாராஷ்ட்ரா மற்றும் ஜார்க்கண்ட் தேர்தல்களில் முதல்வர் வேட்பாளர்களை அறிவிக்காமலேயே போட்டியிட்டு வெற்றி பெற்றோம். எனவே இனிவரும் தேர்தல்களில் முதல்வர் வேட்பாளர்களை அறிவிக்காமல் போட்டியிடப் போகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

ஒரே காரணம் மோடி!

பாஜக தேசிய கட்சியாக இருந்தாலும், கட்சிக்குள் இருந்த குழப்பங்களால் கட்சியை இந்தியா முழுக்க பரப்புவதிலும், ஆட்சியைப் பிடிப்பதிலும் தீவிரம் காட்டாமலேயே இருந்தது. எப்போது மோடி பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தாரோ அன்றிலிருந்து பாஜக சக்தி வாய்ந்த கட்சியாக உருவெடுக்கத் தொடங்கியது. பாஜகவின் வெற்றி வாய்ப்புகளைப் பெரும்பாலும் மோடி மீது செல்வாக்கு தீர்மானிக்கிறது.

முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் தேர்தல் களத்தில் இறங்கும் பாஜகவுக்கு மீண்டும் மோடி மேஜிக் கைக்கொடுக்குமா? உத்தரப்பிரதேச தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றால், எப்படியும் மோடி ஆதரவாளரே  அம்மாநிலத்தின் முதல்வராவார் என்பது அனைவரும் அறிந்ததே.

- ஜெ.சரவணன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close