Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமெரிக்கா- அரவக்குறிச்சி: தேர்தல் வித்தியாசங்களை தெரிஞ்சுக்கோங்க மக்களே!

அமெரிக்கத் தேர்தலுக்கும் நம்ம ஊர் தேர்தலுக்கும் எவ்வளவு வித்தியாசங்கள் இருக்குனு தெரியுமா மக்களே? தெரிஞ்சாலும் படிங்க..


 

   யார் நடத்துவது:

*  நம்ம ஊரில் பிரதமர் தேர்தலை மத்திய அரசின் கீழ் இயங்குற தேர்தல் ஆணையம்தான் காலங்காலமாக நடத்திக்கிட்டு இருக்கு.

* அமெரிக்காவில் அப்படியெல்லாம் இல்லை. அதிபரையே தேர்ந்தெடுக்கிற தேர்தல்னாலும் எல்லாமே மாகாணங்களின் கட்டுப்பாட்டுலதான் நடக்குது.

  ஆளுவது யார்:
* இந்தியாவுல அந்தந்த மாநிலங்களை அந்தந்த மாநில முதல்வர்கள்தான் ஆட்சி செய்வாங்க. ஆளுநர்னு ஒருத்தர் இருந்தாலும் அது சம்பிரதாய முறை பதவியாகத்தான் இப்போவும் இருந்துக்கிட்டு வருது.

*அமெரிக்காவில் அப்படியே அதுக்கு ஆப்போசிட்.  ஆமாங்க, ஒவ்வொரு மாகாணத்தையும்  அந்தந்த மாகாண கவர்னர்கள்தான் நிர்வகிச்சுட்டு வர்றாங்க.

  டார்கெட்:

* நம்ம ஊரில் சில தொகுதிகள் சில கட்சிகளின் கோட்டையாக இருக்கும். ஆனாலும் என்ன நேரத்துல எது நடக்கும்னு தெரியாம சாதகமான தொகுதியாகவே இருக்கிற தொகுதிகள்ல கூட 'கிலி'யோடதான் அனல் பறக்க பிரசாரம் பண்ணுவாங்க. அந்த பயம்!

* ஆனா அங்கே அப்படி இல்லை. தங்களின் கோட்டையாக இருக்கிற ஏரியாக்களைப் பெருசா கணக்குல எடுத்துக்க மாட்டாங்களாம். இவர்களோட ஒரே இலக்கு ஓட்டு கம்மியாக வர்ற தொகுதிகளின் மேலேதானாம்.

  கட்சி ரகசியம்:                          
* இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் எந்தக் கட்சிக்கு ஒட்டுப்போட்டோம்னு சொல்லவே அவ்வளவு தயங்குவோம்.  பொண்டாட்டிக்கிட்டகூட பல பேர் சொல்ல மாட்டாங்கங்கிறது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. 

* சொன்னா ஆச்சரியப்படுவீங்க மக்களே! வாக்காளர் அட்டை வேண்டி அரசாங்கத்துக்கு விண்ணப்பம் அனுப்பும்போதே தேவைப்பட்டால் அந்த வாக்காளர்  எந்தக் கட்சிங்கிறதை குறிப்பிட்டே  அனுப்பலாமாம். புதுசா இருக்குல்ல!

பிரச்சார முறை:

* தேர்தல் பிரசாரம்ங்கிற பேர்ல ஒவ்வொரு கட்சியும் தனித்தனியா கொடி, போஸ்டர், மைக்செட்னு கட்டிக்கிட்டு ஊரெல்லாம் கத்தவிட்டு அலப்பறை பண்ணுவாங்க. இவங்களைப் பற்றி அவங்க கேவலமா பேசுவாங்க. அவங்களைப் பற்றி இவங்க ரொம்ப கேவலமா பேசுவாங்க. இது இங்கே உள்ள ரூல்ஸ். விதின்னுகூட சொல்லலாம்.

* அமெரிக்காவைப் பொறுத்தவரைக்கும் அதிபர் வேட்பாளர்களுக்குள்  மாத்தி மாத்திக் கழுவி ஊத்திக்கிட்டாலும் ஒரே நேரத்தில் ஒரே மேடையிலே நின்னு அதைச் செய்வார்கள். இதுதான் அவர்களின் பிரசாரத்தினுடைய ஸ்பெஷாலிட்டி.

விடுமுறை:

*இங்கே தேர்தல் நடக்கிற நாளன்று ஊரே ரொம்ப ரொம்ப அமைதியா இருக்கும். சில ஊர்கள்ல 144  போடப்பட்டு சைலன்ட் மோட் ஆக்டிவ் மோடாக இருக்கும். அதுலேயும் முக்கியமான விஷயம் அலுவலகங்கள், பள்ளிகள், தனியார் நிறுவனங்கள் னு எல்லாருக்குமே லீவு விட்ருவாங்க.

 *அங்கேயும் அப்படித்தானேனு நீங்க நினைச்சா அது தப்பு பாஸ். லீவே கிடையாது. ஆபீஸ்ல வேனும்னா பர்மிசன் கேட்டுட்டு வந்து எதோ ஒரு சின்னத்துல சைக்கிள் கேப்புல குத்திட்டுப் போகலாம். ஓட்டுப்போட முன்பதிவு வசதி இருக்கிறதால எப்படியோ சமாளிக்கிறாங்க.(ஆனாலும் லீவு விட்ருக்கலாம். பாவம்! )

வாக்குச்சீட்டு:

* நம்ம ஊர் தேர்தலில்  வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர் இருக்கும், சின்னம் இருக்கும். விரலில் மையைத் தடவி ஓட்டுப் போட்டுட்டு வந்துக்கிட்டே இருக்க வேண்டியதுதான்.

* அமெரிக்காவில் ஊருக்குள் ஒயின்ஷாப் வைக்கலாமா வேணாமாங்கிறதில் துவங்கி பல விவகாரமான கேள்விகளை வாக்குச்சீட்டில் கேட்டு வெச்சிருப்பாங்க. அதுலேயே வாக்காளர்கள் பதில் சொல்லிட்டு வரலாம் . ஆட்சிக்கு வந்தா எதைத் தீர்மானமாகக் கொண்டுவரலாம்னு அதைப்பார்த்தே முடிவுக்கு வருவாங்க...

(ஹ்ம்ம்... இங்கேலாம் தேர்தல் வாக்குறுதிகளைக் கட்சிகளேதானே தீர்மானிச்சுக்கிறாங்க!.)

 ஆனாலும் அமெரிக்கத் தேர்தலா இருந்தாலும் சரி அரவக்குறிச்சி தேர்தலாக இருந்தாலும் சரி மாறவே மாறாத ஒரு ஒற்றுமை இருக்கு மக்களே... அது என்னன்னு இந்த வீடியோவை க்ளிக் பண்ணித் தெரிஞ்சிக்கோங்க. 

 

 

 

-ஜெ.வி.பிரவீன்குமார்
        
     

எடிட்டர் சாய்ஸ்

MUST READ