Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பொதுசிவில் சட்டத்தை திமுக எதிர்க்கும் - மு.க.ஸ்டாலின்

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் அறிக்கையில், "மத்திய அரசின் பொது சிவில் சட்டம் கொண்டு வரும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தமிழக இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு நிர்வாகிகள் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் என்னைச் சந்தித்தார்கள். பொது சிவில் சட்டம் உள்ளிட்ட அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளில் மத்திய அரசு எந்தவித மாற்றமும் கொண்டு வரக்கூடாது என்று திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 


அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கும் திமுக பொதுசிவில் சட்டம் போன்றவற்றை கொண்டு வந்து இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு பங்கம் வருவதற்கும், மதச்சார்பற்ற தன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்துவதற்கும் நிச்சயம் இடமளிக்காது. அரசியல் சட்டப்படி சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை பறிக்க எந்த விதத்திலும் அனுமதிக்காது. 

இந்திய நாட்டில் நிலவி வரும் ஏராளமான அடிப்படைப் பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கான மத்திய அரசின் இந்த முயற்சியை திமுக தொடர்ந்து எதிர்க்கும். ஆகவே அரசியல் சட்டப்படியான உரிமைகளுக்காக, தமிழக இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு நடத்தும் போராட்டத்திற்கு என்றும் திமுக துணை நின்று ஆதரவு அளிக்கும் என தெரிவித்துக் கொள்கிறேன்". என்று கூறியுள்ளார்

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

அரசியல் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close