Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கமிஷனர் ஆபீஸ் கெடுபிடி...அல்லாடும் பொதுமக்கள்

 

ஜார்ஜ் வந்தாலே, இப்படித்தான்!

முன்பு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்தபோது..கமிஷனர் நுழைவதற்கு தனி வாசல். பொதுமக்கள் நுழைவதற்கு இன்னொரு வாசல் (கேட் எண்: 3)..என்று தனித்தனியாக ஏற்படுத்தினார். அவருக்குப் பிறகு கமிஷனராக வந்த ராஜேந்திரன், பொதுமக்களுக்கு அதிகம் கெடுபிடிகளை குறைத்தார்.

சமீபத்தில், மீண்டும் கமிஷனராக ஜார்ஜ் பொறுப்பேற்றுக்கொண்டதும், கேட் எண்: 3-ல் நுழையும் பொதுமக்களை செக்கிங் நடத்த ஏராளமான போலீஸாரை குவித்துள்ளனர். பல கட்டங்களாக அங்கு நிற்பவர்கள் நடத்தும் சோதனை கண்டு மக்கள் வெறுப்படைகின்றனர்.

உதாரணத்துக்கு ஒரு சம்பவம். அக்டோபர் 24-ம் தேதியன்று அரசாங்க பாஸ் வைத்திருக்கும் ஒரு மீடியாக்காரர் காரில் கமிஷனர் ஆபீஸுக்குள் நுழைந்திருக்கிறார். அவரிடம் ஏகப்பட்ட கேள்விகள் கேட்டு துளைத்தெடுத்திருக்கிறார்கள். பிறகு, அவர் உள்ளே போனதும், ஒரு பெண் அதிகாரி மீடியாக்காரரின் காரை நெருங்கியிருக்கிறார். மெதுவாக கார் டிரைவரிடம் பூர்வீகத்தை கேட்டு குறிப்பெடுத்திருக்கிறார். அந்த மீடியாக்காரரைப் பற்றியும் விசாரித்தவர், 'காரில் ஏதாவது விசிட்டிங் கார்டு இருக்கும். எடுத்துக் கொடுங்கள்' என்று கேட்டவர், நைசாக அவரது செல்போனில் காரை படமெடுத்திருக்கிறார்.

இதையெல்லாம் தூரத்தில் இருந்து கவனித்துக்கொண்டிருந்த மற்ற நிருபர்கள், '' கமிஷனர் சொல்லித்தான் இதையெல்லாம் செய்வதாக சொல்கிறார்கள். சொன்னது நிஜமா என்று எப்படி கமிஷனரிடம் கேட்கவா முடியும்? அவர் பதவி ஏற்ற நாளன்று பார்த்தது. சாதாரணமாக அவரை சந்திக்கவே விட மறுக்கிறார்கள் கமிஷனர் ஆபீஸுல் உள்ள சிலர் " என்கிறார்கள்.

-  நமது நிருபர் 

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ