Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்


அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.

அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் கே.சி.பழனிசாமியும், அதிமுக சார்பில் செந்தில் பாலாஜியும் போட்டியிடுகின்றனர். திமுக வேட்பாளர் கே.சி.பழனிசாமி இன்று தேர்தல் அலுவலர் சைபுதீனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்வின்போது எ.வ.வேலு, மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் பேங்க் சுப்ரமணியன், அரவக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ கலிலூர் ரஹ்மான், காெங்குநாடு மக்கள் கட்சியின் மாநில துணைப் பாெது செயலாளர் சக்திகாேச் நடராஜன் ஆகியாேர் உடன் வந்தனர்.

அதேபோல் தஞ்சை திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதியும், தேர்தல் அதிகாரி சுரேஷிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்வில்  முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, எம்எல்ஏக்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடன் இருந்தனர்.

அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி இன்று சற்று நேரத்தில் வேட்பு மனுதாக்கல் செய்கிறார். இன்று மாலைக்குள் மூன்று தொகுதிகளுக்குமான  திமுக, அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துவிடுவார்கள் என்று கூறப்படுகிறது.

செய்தி, படங்கள்: காசி.வேம்பையன், கே.குணசீலன்

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

அரசியல் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close