Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அதிபர் தெரியும்... நடிகர் டொனால்ட் டிரம்ப் தெரியுமா? #வீடியோ

மெரிக்க அதிபராக  டொனால்ட் ட்ரம்ப் ஒரு ஹாலிவுட் நடிகரும் கூட. பல ஹாலிவுட் படங்களில் கௌரவ தோற்றத்தில் தோன்றியுள்ளார்.

அவர் நடித்துள்ள சில படங்கள்...

Ghost Can Do It (1989): Bo Derek மற்றும் Anthony Quinn இணைந்து நடித்த இந்த காமெடி க்ரைம் படத்தில் ட்ரம்ப் தன் சுய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு மோசமான துணை நடிகர் என்று ராஸ்ஸி (Razzie) விருதையும்  பெற்றார்.

Ghost Can Do It படத்தில் ட்ரம்ப் தோன்றும் காட்சி:

 

 

 

Home Alone 2: Lost in New Yorkork 1992:

1990ல் வெளியாகி பெரிய வசூல் வெற்றி கண்ட Home Alone படத்தின் இரண்டாம் பாகமான Home Alone 2 : Lost in New Yorkல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக கலக்கிய Macaulay Culkinன் நியூயார்க் ப்ளாஸா ஹோட்டலில் வழி கண்டுபிடிக்க உதவும் பிசினஸ்மேனாக ட்ரம்ப் நடித்துள்ளார்.

அந்த நியூயார்க் ப்ளாஸா ஹோட்டல் ட்ரம்பிற்கு சொந்தமான ஹோட்டல். Home Alone 2 படத்தின் பெரும்பாலான காட்சிகள் அந்த ஹோட்டலில்தான் படம் பிடிக்கப்பட்டது.

Home Alone 2ல் ட்ரம்ப் தோன்றும் காட்சியை காண :

 

The Little Rascals 1994:

யுனிவர்சல் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான குழந்தைகள் காமெடி படமான The Little Rascalsலும் ட்ரம்ப் நடித்துள்ளார்.
Blake McIver Ewingன் கச்சா எண்ணெய் வியாபாரம் செய்யும் பெரும் பணக்கார அப்பாவின் கதாபாத்திரம் ட்ரம்பிற்கு நன்றாகவே பொருந்தியது.

The Little Rascals படத்தில் ட்ரம்ப் தோன்றும் காட்சி:

 

Two Weeks Notice (2002) :

வார்னர் ப்ரோஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான ரொமான்டிக் காமெடி படத்தில் கதாநாயகன் Hugh Grantன் தொழிலதிப நண்பராக நடித்துள்ளார் ஜனநாயக கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப்.

Two Weeks Noticeல் ட்ரம்ப் தோன்றும் காட்சி:

இதைத்தவிர ட்ரம்ப் வேறு சில படங்களில், தொலைகாட்சி தொடர்களில், விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.

- க.விக்னேஸ்வரன்
(மாணவப்பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ