Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஜெ., அறிக்கை மக்களுக்கு ஆறுதல் இல்லை' : ஸ்டாலின் குற்றச்சாட்டு

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மதுரை செல்வதற்காக இன்று சென்னை விமான நிலையத்துக்கு சென்றிருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  "முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பெற்று வருவதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.

ஆனால் அவரது அறிக்கை மக்களின் துன்பத்தை துடைக்கும் வகையில் இல்லை. ரூபாய் நோட்டால் அவதிப்படும் மக்களுக்கு அவரது அறிக்கை ஆறுதல் தரும் விதத்தில் இல்லை.

மக்கள்  நலன் குறித்து சிந்திக்காமல், வாக்கு பற்றியே ஜெ., சிந்திக்கிறார். மேலும், இந்தமுறை ஜல்லிக்கட்டு நடக்குமா? என்பதை பொன். ராதாகிருஷ்ணன்தான் விளக்க வேண்டும்". என்று கூறினார்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ