Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'மக்கள் பிரச்னை குறித்து எதுவும் கேட்க வேண்டாம்' - சரத்குமார்

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸை ஆதரித்து நிலையூர் கைத்தறி நகரில் பிரசாரம் செய்த நடிகர் சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் " நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தில் நீக்கியதை குறித்து கேட்க வேண்டாம். மக்கள் பிரச்னை குறித்தும் எதுவும் கேட்க வேண்டாம். நான் என்ன படம் நடிக்கிறேன் என்று கேட்க வேண்டாம் " ஆரம்பித்திலேயே கடுகடுத்தார்.

முதல்வர் கையெழுத்து அவருடையது இல்லை என்று ஸ்டாலின் சந்தேகம் எழுப்பி இருக்கிறார் என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு குறித்த கேள்விக்கு "அந்த அறிக்கை உண்மையானது ஸ்டாலினுக்கு எல்லாமே சந்தேகம்தான்.அவர் ஸ்கூலுக்குத்தான் போய் படிக்க வேண்டும். அப்பொழுதுதான் அவரின் சந்தேகம் தீரும்" என்றார்.

- சண்.சரவணக்குமார் 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ