Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

3 தொகுதிகளிலும் தேர்தலை ரத்து செய்ய பிரேமலதா வலியுறுத்தல்

கடந்த 30.03.2011 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி தாடிக்கொம்பு பகுதியில் 3 வாகனங்களுக்கு மேல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக பிரேமலதா விஜயகாந்த்  உள்ளிட்ட 9 பேர் மீது தொடரப்பட்ட வழக்கு மற்றும் கன்னிவாடி பகுதியில் சாலையை மறித்து மேடை அமைத்தது உள்ளிட்ட இரண்டு வழக்குகளில் இன்று திண்டுக்கல் நீதிமன்றத்தில் பிரேமலதா நேரில் ஆஜரானார்.

ஆஜராகி விட்டு வெளியே வந்த பிரேமலதா செய்தியாளர்களிடம் பேசுகையில், "கடந்த முறை நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிக அளவு பணப் பட்டுவாடா நடந்ததால் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், தொகுதிகளுக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் அதே வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளார்கள். இந்த முறையும் பகிரங்கமாக பணப்பட்டுவாடா நடந்து வருகிறது. பணப் பட்டுவாடா நிரூபிக்கப்பட்டால் தேர்தலை ரத்து செய்வதாக உதவி தேர்தல் ஆணையர் உமைத் சிங்ஹா தெரிவித்திருந்தார். நேற்று தஞ்சாவூரில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த மூன்று நபர்கள் பணப்பட்டுவாடா செய்யும்பொழுது கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர். இதையே ஆதாரமாக வைத்து, மூன்று தொகுதிகளுக்குமான இடைத்தேர்தலை ரத்து செய்யவேண்டும்' என கூறினார்.

ஆர்.குமரேசன் 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ