Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னைத் துறைமுகத்தில், கள்ள நோட்டு கண்டெய்னர்கள்? - பின்னணி என்ன?

                       சென்னை துறைமுகத்தில் கள்ளநோட்டு

சென்னைத் துறைமுகத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் பணக்கட்டுகள் கன்ட்டெயினர் லாரிகள் மூலம் கடத்தப்பட்டுள்ளது என்று கிடைத்த தகவலையடுத்து,வருவாய்ப் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டதால் சென்னைத் துறைமுகத்தில் பரபரப்பு நிலவியது. 

இதனிடையே, சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்ய, கன்ட்டெயினர் லாரியில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் கடத்தப்பட்டது என்றும், அது சென்னைத் துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டது என்றும் தகவல் கசிந்துள்ளது.
 

வரும் ஏப்ரல் 12-ம் தேதி சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து தேர்தல் வேலைகள் சுறுசுறுப்பு அடைந்துள்ளன. வேட்பாளர்களைக் களம் இறக்கியுள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் வாக்குச் சேகரிப்பு, பிரசார திட்டங்கள் என்று களத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. அ.தி.மு.கவில்  இரட்டை இலை எந்த அணிக்குச் செல்லும் என்ற பரபரப்பு விவாதம் நடந்து வரும் நிலையில் தி.மு.க. மிக லாகவமாக வாக்குச் சேகரிப்பில் வேகம் கூட்டியுள்ளது. பா.ஜனதா, தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் வாக்காளர்களை வளைக்க உத்திகளை வகுத்து வருகின்றன. இந்த நிலையில், சென்னைத் துறைமுகம் பகுதியில் கன்ட்டெயினர் லாரிகள் மூலம் பணம் இறங்கியுள்ளது என்ற தகவல் அரசியல் கட்சிகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக இன்டர்ஸ்டேட் கன்ட்டெயினர் ஓனர்ஸ் அஸோஸியேஷன் பிரதிநிதி ஒருவர் நம்மைத் தொடர்புகொண்டு பேசினார். அவர் கூறுகையில்,"நேற்று இரவு எட்டு மணிமுதல் சென்னைத் துறைமுகம் உள்ளே கன்ட்டெயினர் லாரிகள் செல்ல முடியவில்லை. அதேபோல உள்ளே இருந்தும் எந்த லாரியும் வெளியே வரவில்லை. துறைமுகத்தில் என்ன நடக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. எந்த அதிகாரியையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் நடுவழியிலேயே இரவு முழுக்க 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கன்ட்டெயினர் லாரிகள் அப்படியே நிற்கின்றன. ஓட்டுநர்கள் மிகுந்த அவதிப்படுகிறார்கள். சென்னையின் புறநகர்ப் பகுதிகளான ரெட்ஹில்ஸ், மதுரவாயல் பகுதிகளிலும், பொன்னேரி பகுதிகளிலும் லாரிகள், துறைமுகம் செல்ல இயலாமல் 20 கிலோமீட்டர் தூரம் வரை அப்படியே நிற்கின்றன. வழக்கமாக ரெய்டுகள் நடந்தால் ஒரு சில மணி நேரத்தில் எங்களுக்கு முழுத் தகவல் கிடைத்துவிடும். லாரிகளும் உள்ளே செல்லவும், வெளியே வரவும் இயலும். ஆனால் இன்று 24 மணி நேரம் ஆகியும் தகவல் ஒன்றும் தெரியவில்லை. அநேகமாக, செம்மரக்கடத்தல், போதைப் பொருட்கள் கடத்தல், சந்தன மரக்கடத்தல், ஹவாலா பணம் கடத்தல்  என்று பெரிய அளவில் சட்டவிரோத நடவடிக்கைகள் துறைமுகத்தில் நடந்துள்ளதாகக் கூறப்பட்டால்தான் இதுபோன்ற காத்திருப்புகள் நிகழும். அதனால் துறைமுகத்தில் ஏதோ பெரிய அளவுக்கு நடந்துள்ளது என்று நினைக்கிறோம். அதனால்தான் டி.ஆர்.ஐ. சோதனை நடந்துள்ளது" என்றார். 


         கள்ளநோட்டு

சென்னை காசிமேடு பகுதியில் துறைமுகம் செல்லக் காத்திருக்கும் கன்ட்டெயினர் லாரி ஓட்டுநர் முத்துசாமியிடம் விசாரித்தோம். அவர் கூறுகையில், "சார், நேற்று இரவிலிருந்து இங்கேயேதான் நிற்கிறோம். உள்ளே எந்த லாரியும் போகலை. உத்திரமேரூரில் இருந்து வந்துள்ளோம். துறைமுகத்தில் துணிகள் பார்சல்களை ஏற்றிச் செல்ல வந்துள்ளோம். என்ன ஆச்சு என்று எங்க ஓனருக்குப் பதில் சொல்ல முடியல. அநேகமாக, இங்க தேர்தல் நடக்குது என்பதால் வெளிநாடு அல்லது பக்கத்துத் துறைமுகங்களில் இருந்து கணக்கில் வராத பணம் எதாவது கொண்டு வந்திருப்பாங்க அதனால்கூட இப்படி நீண்ட நேரம் சோதனை நடக்கலாம்" என்றார்.

- சி.தேவராஜன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வாழ்வில் தவறே செய்யாதவர்களுக்கு ஐன்ஸ்டீன் என்ன சொல்கிறார்!? - பிறந்ததின சிறப்புப் பகிர்வு
Advertisement

MUST READ

Advertisement
[X] Close