Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எம்.ஜி.ஆர் நுாற்றாண்டு விழா- மாஸ்டர் பிளானில் ஓ.பி.எஸ்!

எம்.ஜி.ஆர் என்ற மந்திரச் சொல்லின் மகத்துவத்தை மற்றவர்களைவிட அதிகம் அறிந்தவர்கள் அ.தி.மு.க.வினர். அ.தி.மு.க-வுக்கு எப்போதெல்லாம் நெருக்கடிகள் வருகின்றனவோ, அப்போதெல்லாம் எம்.ஜி.ஆரின் பெயர் விஸ்வரூபம் எடுக்கும்.

அ.தி.மு.க., இரண்டாகப் பிளவுபட்டுக் கிடக்கும் இந்த ஆண்டில், எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவும் எடுக்கவேண்டியுள்ளது. அ.தி.மு.க-வின் சசிகலா அணி, 'எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை ஆர்பாட்டமாகத் துவங்கி, இப்போது அமைதியாகிவிட்டது. ஆட்சியையும் கட்சியையும் காப்பாற்றவே அவர்கள்  படாத பாடு பட்டு வரும் நிலையில், எம்.ஜி.ஆரைக் கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டனர். 

சசிகலா அணியின் எம்.ஜி.ஆர் புறக்கணிப்பைத் தங்களுக்கு சாதகமாக மாற்ற, ஓ.பி.எஸ்.அணியினர் முடிவுசெய்துவிட்டனர். எம்.ஜி.ஆர் என்ற சக்தியை இவர்கள் சரியாகப் பயன்படுத்த முடிவுசெய்துள்ளார்கள். இன்று இரவு, ஓ.பி.எஸ் வீட்டில் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டமே, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பற்றிதான் இருந்துள்ளது. அந்தக் கூட்டத்தில், “எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைச் சிறப்புடன் கொண்டாடினால், அ.தி.மு.க-வின் அடிமட்டத் தொண்டர்கள் உற்சாகமடைவார்கள் ” என்று கருத்துகள் பரிமாறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சில முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன. 

“எம்.ஜி.ஆரின் நுாற்றாண்டு விழாவை, சென்னையில் பிரமாண்டமாகக் கொண்டாடுவது என முதலில் முடிவுசெய்யபட்டது. அதாவது, 'கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றங்களை' நடத்துவது எனவும்  எம்.ஜி.ஆரின் சாதனைகளை விளக்கி, கலை நிகழ்ச்சிகளையும் நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆரோடு இணைந்து பணியாற்றிய அரசியல் தலைவர்கள், திரைப்படத் துறையினரையும் கௌரவப்படுத்தும் விழாவும் நடைபெற உள்ளது. எம்.ஜி.ஆரைப் பற்றி நிரந்தர கணினி வழிக் கண்காட்சி ஒன்றையும் உருவாக்கத் திட்டமிட்டுள்ளார்கள். 

இதற்கெல்லாம் மேலாக, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின் முத்தாய்பாக, எம்.ஜி.ஆருக்கு மிகப் பிரமாண்ட அளவில் சிலையுடன் நினைவுச்சின்னம் அமைக்க முடிவு செய்யபட்டுள்ளது. இந்தத் திட்டங்களை ஒவ்வொன்றாகச் செயல்படுத்த, ஒவ்வொரு திட்டத்துக்கும் முக்கிய நிர்வாகிகள் பொறுப்பாளர்களாக நியமிக்க உள்ளார்கள். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, பன்னீருக்கு கை கொடுக்கமா என்பது போகப்போகத் தெரிந்துவிடும்.

-அ.சையது அபுதாஹிர்
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close