Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காஷ்மீர் பிரச்னை: அமைச்சர்களுடன் மோடி ஆலோசனை

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜம்மு- காஷ்மீர் நிலைமை குறித்து மூத்த மத்திய அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலத்துக்கு முன்னர் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக பிரிவினைவாதிகள் முழு கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். இதனையடுத்து சுமார் ஒரு மாத காலமாக காஷ்மீரில் அமைதியற்ற சூழல் நிலவி வருகிறது.

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் பிரிவினைவாத அமைப்புகளுக்கும் இடையை தொடர் சண்டை நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் காஷ்மீர் பிரச்னை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்களான அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு, சுஸ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close