Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஆத்தீ... இது அதுல்ல..?' - தீபா கணவர் மாதவன் தொடங்கிய புதுக் கட்சி!

'எம்.ஜி.ஆர் ஜெ.ஜெ திராவிட முன்னேற்றக் கழகம்' எனும் பெயரில் புதிதாக வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்சியைத் தொடங்கி இருக்கிறார், 'எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை' பொதுச் செயலாளர் தீபாவின் கணவர் மாதவன். 'நான் சொன்னது 10 சதவிகித உண்மைகளைத்தான். சொல்லாமல் இன்னும் 90 சதவிகித உண்மைகளை லாக்கரில் போட்டுப் பத்திரமாகப் பூட்டி வைத்திருக்கிறேன்' என சுயநலத்தோடு 'சிலரைப் போல' டிமாண்ட் செய்து கொண்டிருக்காமல், முன்பே சொன்ன நாளில் திட்டமிட்டபடி கட்சியைத் தொடங்கி இருக்கிறார் மாதவன். 

MJDMK - மாதவன்

ஜெயலலிதா சமாதியில் தொடங்கப்பட்ட கட்சிகள் எனும் பெரிய பட்டியலுக்குள் வீறுநடை போட்டு நுழைந்திருக்கிறது  மாதவன் தொடங்கிய இந்தக் கட்சி. மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்றிருந்த (?!) தீபாவின் வெற்றிடத்தை மீண்டும் மண்ணை அள்ளிப் போட்டு நிரப்ப வந்திருக்கிறாராம் மாதவன். 'உங்கள் மனைவி தீபா உங்கள் கட்சிக்கு ஆதரவு அளிப்பாரா எனும் கேள்விக்கு 'அதை நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும்..' எனப் பதில் அளித்திருக்கிறார். (ஆத்தீ... இது அதுல்ல..?!) மேலும், 'தீபா தொடங்கியது பேரவை; நான் தற்போது தொடங்கி இருப்பது கட்சி' என 'நம்ம அளவுக்கு அவங்க வொர்த்தே இல்ல' பாணியிலேயே பேசி இருக்கிறார். 
 
'எம்.ஜி.ஆர் அம்மா தீபா...' என தீபா தனது கட்சிக்குப் பெயரை வைத்தபோதே எம்.ஜி.ஆரின் அம்மா சத்யபாமா தானே எனக்கேட்டு வகைதொகையில்லாமல் கலாய்த்துத் தள்ளினார்கள் நெட்டிஸன்கள். ஆனால் இப்போதும் அதே மாதிரி ஒரு குழப்பமான பெயரைத்தான் தனது கட்சிக்குச் சூட்டியிருக்கிறார் மாதவன். 'எம்.ஜி.ஆர் தி.மு.க-வில் இருந்தார் சரி. ஜெயலலிதா எப்போ தி.மு.க-வில் இருந்தாங்க' என 'நீங்க வெறும் தாஸா... இல்லை லார்ட் லபக்கு தாஸா..?' டைப்பில் குடைந்து குடைந்து கேள்விகேட்டு வருகிறார்கள். 

MJDMK - 'மைக்கேல் ஜாக்சன் தி.மு.க' போலன்னு கலாய்ச்சிக்கிட்டு இருக்காங்க. தினகரன், சசிகலா திட்டப்படிதான் மாதவன் தீபாவை எதிர்க்க ஆரம்பிச்சதா ஏற்கெனவே ஒரு பேச்சு உலாவுது. அதை மெய்ப்பிக்கிற மாதிரியேதான் இந்தக் கட்சிப் பெயரும் இருக்கு. எப்படின்னு கேட்கிறீங்களா..? தினகரன் ஆர்.கே.நகர் வேட்பாளராக இருக்கும்போது அவரோட சின்னம் என்ன... தொப்பி. மைக்கேல் ஜாக்சனுக்கும் ஃபேவரைட் தொப்பி. ரெண்டையும் கூட்டிக் கழிச்சுப் பாருங்க. கணக்கு சரியா வரும். தட் தில்லுமுல்லு தில்லுமுல்லு மொமென்ட்ஸ்!

'குடும்பப் பிரச்னைகளுக்கு எல்லாம் கட்சி ஆரம்பிச்சா வீட்டுக்கு வீடு நாலு கட்சிகள் அணிவகுத்து நிற்கும்ப்பா... ஏம்ப்பா' என அவரது புதுக்கட்சி தொடக்கத்தைப் பற்றிப் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அவர் கட்சியில் சேரும் உறுப்பினர்களுக்கு (உறுப்பினர் சேர்க்கைக்காகப் பல கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக தீபாவின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது கொசுறு செய்தி (உள் அடைப்புக்குள் உள்நோக்கம் இல்லை)) என்னென்ன தகுதிகள் நிர்ணயிக்கப்படும் எனத் தெரியவில்லை. மனைவியால் கைவிடப்பட்ட கணவர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு சேர்க்கையில் சிறப்பு அனுமதி வழங்கப்படலாம். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close