Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'சசிகலா பொதுச் செயலாளராக நீடிக்கக் கூடாது' - உச்ச நீதிமன்றத்தில் மனு

ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக நீடிக்கத் தடை விதிக்கக்கோரி ஆம் ஆத்மி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.


சொத்துக்குவிப்பு வழக்கில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா பெங்களூரு சிறையில் தண்டனையில் இருக்கிறார். சிறையில் இருந்தாலும் அவரே  அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராகத் தொடர்ந்து இருந்து வருகிறார். அ.தி.மு.க அம்மா அணியைச் சேர்ந்தவர்கள் அவ்வப்போது அவரை சிறையில் சென்று சந்தித்து முக்கிய முடிவுகளை எடுத்து வருகின்றனர். அ.தி.மு.க  துணைப் பொதுச் செயலாளர் தினகரனும் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு முன்பாக பெங்களூரு சென்று சசிகலாவின் ஆலோசனையைப் பெற்ற பின்னரே முடிவுகளை அறிவிக்கிறார்.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன், உச்ச நீதிமன்றத்தில், 'சசிகலா அ.தி.மு.க பொதுச் செயலாளராக நீடிக்கத் தடை விதிக்கக்கோரி மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், 'சசிகலா அறிவுறுத்தலின்படி முதல்வர், அமைச்சர்கள் செல்படுவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்க சசிகலாவை ஆலோசித்ததாகக் கூறும் ஆளுங்கட்சியின் நடவடிக்கை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. சசிகலா அ.தி.மு.க பொதுச் செயலாளராக நீடிக்க தடை விதிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. 

இன்று, சிறைக் கைதிகள் உரிமை மைய இயக்குநர், சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக மற்றும் கர்நாடக தலைமைச் செயலாளர்களுக்குக் கோரிக்கை வைத்தார். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close