Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தினம் தினம் திருநாளே! தினப் பலன் செப்டம்பர் 1-ம் தேதி பஞ்சாங்கக் குறிப்புகளுடன்


தினம் தினம் திருநாளே!
தினப் பலன்  செப்டம்பர் - 1
'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்

தினப் பலன்

மேஷம்:மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். 

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்கள் சேரும்.

ரிஷபம்: இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. 

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

மிதுனம்: உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். தாய் வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் உங்களுக்கு மகிழ்ச்சியையும் பெருமையை யும் தருவதாக அமையும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழியில் நன்மை ஏற்படும்.

கடகம்:காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். வெளியூரில் இருந்து நல்ல  செய்தி வரும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும்.

சிம்மம்:உற்சாகமான நாள். தெய்வ காரியங்களில் ஈடுபடுவீர்கள்.  நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். வெளியில் போகும்போது பொருட்கள் தொலைந்து போகக்கூடும் என்பதால் எச்சரிக்கை அவசியம்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புண்ணிய தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

கன்னி:இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூர்களில் இருந்து எதிர்பார்த்த  தகவல்கள் வரும். அவசியத் தேவைகளுக்கு கடன் வாங்க நேரும். மற்றவர்களுடன் வீண்மனஸ்தாபம் உண்டாகும் என்பதால் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். 

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் மாமன் வகையில் நன்மை ஏற்படும்.

துலாம்:காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள்.  சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். 

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி கிடைக்கும்.

விருச்சிகம்: மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பணியின் காரணமாக சிலர் வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். 

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க காரியங்களில் தாமதம் ஏற்படும்.

தனுசு:நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி வேலைச் சுமை இருந்துகொண்டே இருக்கும். ஆனாலும், முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். பிற்பகலுக்கு மேல்  புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். 

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமை காப்பது அவசியம்.

மகரம்:மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிற்பகலுக்குமேல் வீண் செலவுகள் உண்டாகும். காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும்.  எதிலும் பொறுமை அவசியம்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயின் மூலம் அனுகூலம் உண்டாகும்.

கும்பம்:மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பிற்பகலுக்கு மேல். எனவே, புதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம். 

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் தடைகள் ஏற்படும்.

மீனம்: இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள்.  நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. வெளியில் போகும்போது பொருட்கள் தொலைந்து போகக்கூடும் என்பதால் எச்சரிக்கை அவசியம்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close