Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தினம் தினம் திருநாளே! தினப் பலன் செப்டம்பர் 6-ம் தேதி பஞ்சாங்கக் குறிப்புடன்

தினம் தினம் திருநாளே!
தினப் பலன் - செப்டம்பர் - 6
'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்

தினப் பலன்

மேஷம்: மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள்.  

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

ரிஷபம்: இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும்.  நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. 

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க காரியங்கள் அனுகூலமாகும்.

மிதுனம்: முற்பகல் வரை காரியங்களில் அனுகூலம் உண்டாகும். இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும்.  

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும் யோகம் உண்டாகும்.

கடகம்: உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.   பிற்பகலுக்குமேல்  உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். 

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

சிம்மம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பணவரவும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். வெளியூர்களில் இருந்து  சுபச் செய்தி வரும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். 

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

கன்னி:இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள்.  நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். 

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் ஏற்பட வாய்ப்புண்டு.

துலாம்: வெளியூர்களில் இருந்து எதிர்பார்த்த  தகவல்கள் வரும். அவசியத் தேவைகளுக்கு கடன் வாங்க நேரும்.  வீண் அலைச்சல் உண்டாகும். நேரத்துக்கு சாப்பிடமுடியாதபடி பணிச் சுமை இருந்தபடி இருக்கும். பிள்ளைகளால் சிறு சங்கடம் ஏற்படக்கூடும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

விருச்சிகம்:காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்தி உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள்.  சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். . 

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழியில் நன்மைகள் நடக்கும்.

தனுசு: மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். 

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களின்போது கவனமாக இருக்கவும்.

மகரம்:  நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி வேலைச் சுமை இருந்துகொண்டே இருக்கும். ஆனாலும், முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். 

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணிகளில் கவனமாக இருப்பது அவசியம்.

கும்பம்:மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு.   மற்றவர்களுடன் வீண்மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ காரியங்களில் ஈடுபட வாய்ப்பு உண்டாகும்.

மீனம்: மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close