Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தினம் தினம் திருநாளே! தினப் பலன் செப்டம்பர் - 9-ம் தேதி பஞ்சாங்கக் குறிப்புடன்

தினப் பலன்
9.9.17 - சனிக்கிழமை
'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்

தினப் பலன்


மேஷம்: இன்று   உங்களுக்கு உற்சாகமான நாளாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும்.  

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் தடை தாமதம் ஏற்படும்.

ரிஷபம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பிற்பகலுக்குமேல் சிலருக்கு சிறிய அளவில்  உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். 

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் நன்மை ஏற்படும்.

மிதுனம்: புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. மாலையில் நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

கடகம்: இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். வராது என்று நினைத்திருந்த  கடன் தொகை திரும்பக் கிடைக்கும். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள்  ஏற்படக்கூடும். 

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும்.

சிம்மம்: வெளியூர்களில் இருந்து  சுபச் செய்திகள் வரும்.  மனம் உற்சாகமாகக் காணப்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பிற்பகலுக்குமேல் புதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும். 

கன்னி: காலையில் புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவேண்டாம். வீட்டில் பராமரிப்புப் பணிகள் அதிகரிக்கும்.உறவினர்களால் நன்மை ஏற்படும். பிற்பகலுக்கு மேல் சிலருக்கு எதிர்பாராத சந்திப்பு மகிழ்ச்சி தரும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.

துலாம்: இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்திகள் வரும்.  

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படும்.

விருச்சிகம்:  முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும்.  பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். வெளியில் செல்லும்போது பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.

தனுசு: உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். எதிர்பார்க்கும் பணம் கைக்கு வரும். பிற்பகலுக்கு மேல் காரியங்களில் தடை தாமதங்கள் உண்டாகும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

மகரம்: இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். ஒரு சிலருக்கு புதியவர்களின் அறிமுகமும் அதனால் நன்மையும் உண்டாகும். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சிகளில் சிறு தடைகள் ஏற்படும்.

கும்பம்:  மனதில் உற்சாகம் நிலவும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

மீனம்:  புதிய முயற்சிகள் சாதகமாகும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். தேவையான பணம் கைக்குக் கிடைக்கும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பாராத ஆதாயம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் பேச்சில் கவனம் தேவை.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.
 

 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close