Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தினம் தினம் திருநாளே! தினப் பலன் அக்டோபர் 12 -ம் தேதி பஞ்சாங்கக் குறிப்புடன்

தினப் பலன்
அக்டோபர் - 12- வியாழக்கிழமை
'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்

தினப் பலன்

மேஷம்:  உற்சாகமான நாள். உங்கள் தேவையறிந்து நீங்கள் கேட்காமலேயே மற்றவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்கவும்..

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணை வழியில் நன்மை உண்டாகும்.

ரிஷபம்: காலையில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.  பிற்பகலுக்குமேல் தாய் வழி உறவினர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் உற்சாகமாகக் காணப்படுவீர்கள்.. 

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

மிதுனம்:  இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக இருக்கும். கனிவான பேச்சால் மற்றவர்களைக் கவர்வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த விஷயம் சாதகமாக முடியும். உங்கள் ஆலோசனைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். 

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளைப் பெறும் வாய்ப்பும் உண்டாகும்.

கடகம்: உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி  உண்டாகும். எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். வாழ்க்கைத்துணை வழி  உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். மாலை நேரத்தில் சிறுவயது நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தாய்மாமன் வகையில் நன்மை ஏற்படும்.

சிம்மம்: தேவையான பணம் எப்படியும் கிடைத்துவிடும். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். மாலையில் நண்பர்களின் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தந்தை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். 

கன்னி:  இன்று உங்கள் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். பிற்பகலுக்குமேல் நீங்கள் எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். நீண்டநாள்களாக நினைத்திருந்த குலதெய்வ பிரார்த்தனையை இன்று நிறைவேற்றுவீர்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்

துலாம்:  காலைப் பொழுது இதமாக விடியும். மனதுக்கு இனிய சம்பவங்களைக் கேட்பீர்கள். அன்றாடப் பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். பிற்பகலுக்குமேல் வாழ்க்கைத் துணை வழியில் ஆதரவும் ஆதாயமும் உண்டாகும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும்.  

விருச்சிகம்:  இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.  அறிவுபூர்வமான பேச்சால் மற்றவர்களுக்கு ஆறுதல் தருவீர்கள். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைத்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும் வாய்ப்பு உண்டு. 

தனுசு:  காரியங்கள் அனுகூலமாக முடியும். தேவை அறிந்து நண்பர்கள் உதவுவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.. 

மகரம்:  காலையில் அன்றாடப் பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். பிற்பகலுக்குமேல் வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கப்பெறுவீர்கள். இன்றைக்குப் புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடுவது நல்லது. நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குச் சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.

கும்பம்: மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். நண்பர்களிடமிருந்து கேட்ட உதவிகள் கிடைக்கும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் உங்களுக்குச் சாதகமாக முடியும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மீனம்:  இன்று நீங்கள் அன்றாடப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். பிற்பகலுக்குமேல் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். தேவைப்படும் பணம் கடனாகக் கிடைக்கும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தாய்வழி  உறவுகளால் நன்மைகள் ஏற்படக்கூடும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close