Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உறவுகளை இணைக்கும் கொலு!

வராத்திரி தெரியும்! சாரதா நவராத்திரி? இந்தப் புரட்டாசி மாதத்தில் கொண்டாடும் நவராத்திரிக்குத்தான் சாரதா நவராத்திரி என்று பெயர். இதேபோல இன்னும் இரண்டு நவராத்திரிகளும் உண்டு. சித்திரை மற்றும் ஆடி மாதங்களில் இந்த இரு நவராத்திரிகளும் வரும். சித்திரையின் நவராத்திரி வசந்த நவராத்திரி என்றும், ஆடியின் நவராத்திரி வராஹி நவராத்திரி என்றும் அழைக்கப்படும். ஆனால், இந்த இரு நவராத்திரிகளும் அத்தனை பிரபலமில்லை.சாரதா நவராத்திரி மட்டுமே விமர்சையாக கொண்டாடப்படுகிறது, கொலு கொண்டாட்டத்துடன்!

இதைப் பற்றி உற்சாகமாகப் பேசுகிறார், தன் வீட்டில் இந்த நவராத்திரிக்கு கொலு வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கும் சென்னை, தி.நகரைச் சேர்ந்த சாருலதா.

''நம்மைக் காத்து அருளும் அம்மனை, ஆராதனை செய்யணும்... அந்த அம்மனையே நினைத்து தியானம் செய்யணும். இதுதான் இந்த நவராத்திரியோட முக்கியமான தாத்பர்யம். என்னோட சின்ன வயசுல அம்மா கொலு வைக்கும்போது ஆசையா இருக்கும். அம்மாவை போலவே நாமளும் கொலு வைக்கணும்னு ஒவ்வொரு வருஷமும் நினைச்சுக்குவேன். கல்யாணத்துக்குப் பிறகு, முதன்முறையா நானே கொலு வெச்சப்ப எல்லாரும் அசந்து போயி மூக்கு மேல விரல் வெச்சாங்க. அந்த அளவுக்கு அசத்தலா பண்ணியிருந்தேன்.

அன்னிக்கு ஆரம்பிச்ச கொலு பயணம், முப்பது வருஷமா தொடருது. கிராமம்னா, அக்கம் பக்கத்து உறவுகளோட பேசிப்பழகறதுக்கு எப்பவுமே வாய்ப்பு இருக்கும். நகரங்கள்ல அப்படி கிடைக்கிறதில்ல. நகரங்களை பொறுத்தவரை இந்த கொலு மூலமா நம்ம சுத்தி இருக்குறவங்களோட உறவை மேம்படுத்திக்கலாம்.

இந்த கொலுவுக்காக புதுசா பொம்மைகள் எதையும் நான் வாங்கறதில்லை. கணவர் வீட்டு உறவுகள்கிட்ட இருந்து கிடைச்சதுதான் அத்தனை பொம்மையும். ஆக, இந்தக் கொலு மூலமா உறவும் வளருது'' என்று சொல்லி சிலாகித்த சாருலதா, ''எங்க கிராமத்தில் காத்துல அறுந்து கீழ விழுந்த தூக்கனாங்குருவிக் கூட்டை கொண்டு வந்து, இந்தக் கொலுவுல வெச்சிருக்கேன். அதுல மரத்தால செஞ்ச முட்டைகளை கலர் பண்ணி வெச்சிருக்கேன். இதைப் பாக்குறவங்க அசந்து போறது, எனக்கு ரொம்பவே பெருமையா இருக்கும்’’ என்று சொல்லி அழகாய் சிரிக்கிறார்.

கே. அபிநயா

படம்: க. பாலாஜி

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ