Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜனவரி 6இல் தியாகராஜர் ஆராதனை தொடக்கம்!

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் ஸ்ரீதியாகராஜரின்  168வது ஆராதனை விழா ஜனவரி 6ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.

திருவையாறு தியாகராஜர் திருமண மண்டபத்தில் ஸ்ரீதியாகபிரும்ம மகோத்சவ சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகளின் 168வது ஆராதனை விழா ஜனவரி 6ஆம் தேதி தொடங்கி 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தியாகராஜா ஆராதனையின் கடைசி நாளான ஜனவரி 10ஆம் தேதி நடைபெறவுள்ள ஆராதனை விழாவில் 500க்கும் அதிகமான இசைக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் பங்கேற்று பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி அஞ்சலி செலுத்த உள்ளனர்.

இசை கலைஞர்கள் எல்லோரும் ஒரே இடத்தில் கீர்த்தனைகள் பாடுவது அத்தனை அழகாய் இருக்கும். ஜனவரி மாதம் நடைபெறவுள்ள தியாகராஜ ஆராதனைக்காக திருவையாறு இப்போதிலிருந்தே தயாராகி வருகிறது.


இ.லோகேஸ்வரி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close