Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நிலவின் சேனைகளை பூமிக்கு வரவேற்கும் திருக்கார்த்திகை விளக்குகள்

கார்த்திகை மாதம், காந்தல் பூ மலரும் மாதம், வைகை ஆற்றில் வெள்ளம் வரும் மாதம், விண்மீன் கூட்டம் கீழ்வானில் தோன்றும் மாதம், அதுமட்டுமல்ல ஆதவனின் அரும்புகள் சுடர் ரூபமாய் நம் வீட்டு விளக்குகளில் வீற்றிருக்கும் மாதம்.

இந்நன்னாளில் சிட்டி, அகல், அன்ன விளக்குகளில் திரி போட்டு விளக்கு ஏற்றுகின்றோம். அப்படி நாம் ஏற்றும் விளக்குகளுக்கு அத்தனை சிறப்புகள்.

தமிழகம் முழுதும் வரும் டிசம்பர் 5-ஆம் நாம் திருக்கார்த்திகை திருநாள் வெகு சிறப்பாக கொண்டாட இருக்கிறது. கார்த்திகை  திருநாளுக்காக வாங்கும் விளக்குகள் பெரும்பாலானவை  திண்டுக்கல்லில் உள்ள வேடப்பட்டி, நல்லாம்பட்டி கிராமங்களில்தான் செய்யப்படுகின்றன.

வேடப்பட்டியில் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக விளக்குகள் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வரும் அய்யனார், “ நாங்கள் பல தலைமுறைகளாக இந்த தொழில் செய்து வருகிறோம்.

முன்னர் 30 குடும்பங்கள் இந்த தொழிலை செய்து வந்தனர். ஆனால், இன்று 5 குடும்பங்கள் மட்டுமே இந்தத் தொழிலை செய்து வருகிறோம். களிமண், செம்மண், மணல் ஆகிய மூன்றும் விளக்குகள் செய்வதற்கான முக்கிய மூலப் பொருட்கள்.

ஒரு நாளில் 1500 சிட்டிகள் வரை செய்கிறோம். மேலும் அகல்விளக்கு, அன்ன விளக்கு, குத்து விளக்கு, லட்சுமி விளக்கு, பிள்ளையார் விளக்கு, இலை விளக்கு, மண்டபம் விளக்கு, தேங்காய் விளக்கு என 50 வகையான விளக்குகளையும் தயாரிக்கிறோம். 100 சிட்டிகள் 60 ரூபாய்க்கு விற்கப் படுகிறது. மற்ற விளக்குகள் 15 ரூபாயிலிருந்து 80 ரூபாய் வரைக்கும் விற்கப் படுகிறது.

தென் தமிழகம் மற்றும் கேரளாவிற்கு தேவையான விளக்குகள் அனைத் தும் இங்கிருந்து தான் அனுப்பப்படுகின்றன. இந்த விளக்குகள் அனைத்தும் அச்சுகள் அல்லாது கைவேலைப்பாடுகளாலேயே உருவாக்கப் படுவது இதன் சிறப்பம்சமாகும்.”என்றார்.

அய்யனார், விளக்குகள்  மட்டுமல்லாது, டெரகோட்டா சிலைகளும் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

விதவிதமான விளக்குகள் ஏற்றி பௌர்ணமி நிலவின் சேனைகளை பூமிக்கு கொண்டு வந்து ஆரல் நாளில் ஆனந்தமடைவோம் !

- ப.சூரியராஜ்
படங்கள்: எஸ்.பரத்
(மாணவப் பத்திரிகையாளர்கள் )

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close