Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சனிபகவான் விருச்சிக ராசிக்கு பிரவேசித்தார்....

ரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் சனிப்பெயர்ச்சி இன்று நடைபெற்றது. சனிபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பிரவேசித்தார்.

இதையொட்டி காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் இன்று சனிப்பெயர்ச்சி விழா  சிறப்பாக நடைபெற்றது.

இன்று பிற்பகல் 2 மணி 16 நிமிடத்தில் சனிபகவான் விருச்சிக ராசிக்கு பிரவேசித்தார். இந்த நேரத்தில் கோயிலில் தனி சன்னதி கொண்டிருக்கும் ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு கருப்பு வஸ்திரம், தங்க கவசம் அணிவித்து மகா தீபாராதனை நடத்தப்பட்டது. 

முன்னதாக, ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், சகஸ்ரநாம அர்ச்சனையும்,அதைத்தொடர்ந்து சனிப் பெயர்ச் சியின்போது, உற்சவரான சனிபகவான் தங்க காக வாகனத்தில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

சனிப்பெயர்ச்சி தினமான இன்று, அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு இரவு 12 மணி வரை தரிசனம் பக்தர்கள் தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. நேர முறைப்படி இல்லாமல் சனிப்பெயர்ச்சி விழாவில் தரிசனம் செய்ய வரும் அனைவரும் தரிசித்து செல்லும் வரை கோயில் திறக்கப்பட்டிருக்கும். 

திருநள்ளாறு சனீஸ்வர பகவானை தரிசிக்க வரும் பக்தர் களுக்காக சிறப்பு ரயில்களும், பேருந்துகளும் ஏற்பாடு செய்யப் பட்டிருகிறது.சனிப்பெயர்ச்சி அன்று சனீஸ்வர பகவானை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாரில் திரண்டிருக்கின்றனர்.

இனி வரும் ஆண்டுகளும் இவ்உலகம் சுபிட்சமடைய சனீஸ்வர பகவான் அருள் புரியட்டும்.

-இ.லோகேஸ்வரி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ