Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பஜனை பாடும் பாலகர்கள்..!

மார்கழி மாதம் என்றாலே அனைவரின் உள்ளங்களிலும் ஒரு குதூகலமும், ஆன்மீகமும் உலா வரும். சிறியவர் ஆயினும் சரி, பெரியவர் ஆயினும் சரி, மார்கழி மாதம் என்றால் இன்னொரு சிறப்பு  பஜனை. காலை, மாலை என இருவேளையில் கோயிலிலும், தெருக்களிலும் பஜனைகள் நடைபெறும். அதுவும் அதிகாலை வேளையில் கடவுள்களை நினைத்து பக்திச்சுவையுடன் கூடிய பாட்டுக்களை பஜனையில் பாடி, இன்னும் இன்னும் ஆன்மிகத்தில் லயித்துப் போவது இந்த மார்கழி மாதத்தில் தான்.

"திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
 திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
 திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்
 திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே"

இப்படிப்பட்ட பாடல்களை பாட இன்று எல்லோருக்கும் நேரம் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் திருப்பூர் மாவட்டம், கணியூர் கிராமத்தில் இதை யாரும் இன்றளவிலும் மறக்கவில்லை. மார்கழி மாதத்தில், அதிகாலையில் எழுந்து, குளித்துவிட்டு கோயிலுக்கு வந்து சுத்தப்படுத்தி, அங்கு நிறைந்திருக்கும் கடவுளை மனமுருக பிரார்த்தித்து வருகின்றனர். இது அனைத்து ஊரிலும் நடப்பது தானே, இதில் என்ன ஆச்சரியம், என்று தானே கேட்கிறீர்கள்?

ஆச்சரியம் இருக்கிறது. ஆம், இது அத்தனையும் செய்வது கணியூர் கிராமத்தில் உள்ள சிறுவர்கள். அதுவும் 8 முதல் 13 வயதுக்கு உட்பட்ட ஏழு  இளம்சிறார்கள். காலை எழுந்து பள்ளி செல்லவே சோம்பேரிதனப்படும் இன்றைய நவீன உலகில் வாழும் சிறுவர்கள் மத்தியில், இவர்கள் செய்யும் இதுபோன்ற வேலை பிறருக்கு எடுத்துக்காட்டாகவே அமைகிறது. அவர்களது இந்த பணியை ஊர் மக்களும் ஊக்குவித்து வருகின்றனர்.

காலை பள்ளிக்கு செல்லும் முன்பும், பள்ளி முடித்து வீடு திரும்பிய பின்னரும், இவர்கள் செய்யும் ஆன்மிக சேவை நமக்கு சற்று வியப்பாகவே இருக்கிறது.

மாலை வேளையில் பஜனை பாடிவிட்டு, அன்றைய பஜனைக்கு தேவையான  எண்ணெய், பால், தேங்காய், சூடம் மற்றும் அன்று வருபவர்களுக்கு அவுல், பொட்டுக்கடலை, வெல்லம் ஆகியவற்றை கலந்து பிரசாதமாக  கொடுத்து வருகின்றனர். பஜனைக்காக, வீட்டிற்கு ஒருவர் வந்து கொடுக்கும் சிறு பணத்தை வைத்து பிரசாதம் தயாரிக்கின்றனர். மார்கழி மாதம் முழுவதும் இந்த இறை பணியை செய்து வரும் இவர்கள், தை 1ஆம் தேதி சப்பரமும் எடுக்கின்றனர்.

இது வெறும் ஆன்மிகப் பணி மட்டுமல்ல. அதையும் தாண்டி இது ஒரு சமூக அக்கறையுள்ள பணியாகவே அந்தப் பகுதி மக்களால் பார்க்கப்படுகிறது. சின்னஞ்சிறிய அரும்புகளின் பணியை பாராட்டுவோம்... அவர்கள் செய்து வரும் பணியை நாமும் பின்பற்றுவோம்.

செய்தி, படங்கள்: மு.ரமேஷ்
(மாணவப் பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ