Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வைகுண்ட ஏகாதசி: ஜன. 1ல் ஸ்ரீரங்கநாத கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு!

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம்  ஸ்ரீரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வரும் ஜனவரி 1 ஆம் தேதி சொர்க்க வாசல் திறப்பு உத்சவம் நடைபெற உள்ளது.

பள்ளி கொண்ட பெருமாளிடம் தங்கள் வேண்டுதல்களைக் கூறி, அவர் அருள் பெற வழக்கமான நாளிலேயே திரளான மக்கள் கூடும் இடம் இத்திருத்தலம். வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசலை மிதிப்பது வாழ் நாளுக்குப்பின் அந்த சொர்கத்தையே அடைவதற்கான வழி என்பது ஐதீகம். அதனால் அன்றைய தினத்தைப் பற்றி விவரிக்கவேண்டுமா எனன....

அன்றைய தினம் விடியற் காலை 5 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படும். பெருமாள் மிகவும் விசேஷமான முத்தங்கி அலங்காரத்தில் காட்சி அளிப்பார். இந்த வைபவத்தைக் காண பக்தர்கள் முந்தைய நாள் இரவு முதலே நீண்ட நெடிய வரிசையில் காத்திருப்பர். இந்த உத்சவம் பகல் பத்து இராப் பத்து என இரண்டு பகுதிகளாக நடைபெறுகின்றது. 22 ஆம் தேதி தொடங்கும் பகல் பத்து உற்சவத்தின் பத்து நாட்களும் காலை 5 மணிக்கு புறப்பட்டு உத்திர வீதியில் பெருமாள் வீதி உலா வருவார்.

அதனை தொடர்ந்து வரும் 20 நாட்களுக்கு, மிகவும் புனிதமாக கருதப்படும் அரையர் சேவை நடைபெற இருக்கிறது. இராப்பத்து நிகழ்ச்சியில் முத்தங்கி, ரத்தினங்கி போன்ற விசேஷ அலங்காரங்களோடு பெருமாள் காட்சி தருகிறார் என்பது சிறப்பு

இந்த உத்சவ ஏற்பாடுகளை கோயில் நிர்வாகமும், அரசும் சேர்ந்து மும்முரமாக செய்து வருகின்றன. குடமுழுக்கு பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு முதல் வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் தங்குவதற்காக அரசு அறிவித்த யாத்ரீ நிவாஸ் என்ற தங்கும் அறைகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன .

கோயிலை சுற்றியுள்ள வடக்கு மற்றும் கீழ உத்திர வீதிகளில் தண்ணீர் வசதியுடன் தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்பட்டு வருகிறது. மக்களின் பாதுகாப்புக்காக கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தி போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

பெருமாளைக் காணபோம்.. பெரும் புண்ணியம் அடைவோம் !


- மு.கோதாஸ்ரீ
படங்கள்: தி.கௌதீஸ்

(மாணவப் பத்திரிக்கையாளர்கள் )


 

 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ