Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அழகிய கோலம், அருள் தரும் பிரசாதம்: மார்கழி மகத்துவம்!

வ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கிறது. அந்த வரிசையில் மார்கழி மாதம் என்றால் கோலம் தான் சிறப்பு. இந்த மாதத்தில் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் விதவிதமான கோலங்கள் அணி வகுத்து பார்க்க அழகாய் காட்சியளிக்கும்.

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

வருடத்திற்கு 12 மாதங்கள் உள்ளன.  ஆனால் மார்கழி மாதத்தில் மட்டும் ஏன் கோலமிட்டு வீட்டை சிறப்பு செய்கிறார்கள் , மற்ற மாதங்களுக்கு இந்த சிறப்பு இல்லாதது ஏன்? என்பது பற்றி பெண்கள் சிலரிடம் கேட்டோம். 

“மார்கழி மாதம் முழுவதும் பீடை நாட்கள் (கெட்ட நாள்) என்பார்கள். இந்த மாதத்தில் எந்த சுப காரியங்களும் நடைபெறாது. ஆதலால், இந்த பீடை நாட்கள் நீங்குவதற்க்காக அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு கள் மற்றும் விளக்கேற்றி வழிபடுவார்கள். வீடுகளில் அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்து விடவேண் டும்.அதிகாலை நேரங்களில் வீட்டில் விளக்கு எரியவேண்டும். வீடு முழுவதும் பிரகாசமாக காட்சியளிக்க வேண்டும்.

அதிகாலை 4 மணிக்கு வீட்டின் வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போடவேண்டும். அதில் சில சம்பிர தாயங்கள் உள்ளன. வாசலில் ஒரு திசையை நோக்கி தண்ணீர் தெளிக்கும் போது, பாத்திரத்தில் உள்ள நீர் தீர்ந்த பிறகு தான், மறுதிசையில் மீண்டும் தண்ணீர் கொண்டு வந்து தெளிக்க வேண்டும். குறை நீருடன் மறுதிசையில் தண்ணீர் தெளிக்கக் கூடாது. இந்த சம்பிரதாயத்தை இன்றும் நாங்கள் கடைபிடிக்கிறோம்” என்றார் ஒரு பெண்மணி.

மார்கழி மாதம் முழுவதும் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் கோலமிட்டிருப்பார்கள். கோலம் போட்டு முடித் ததும், அந்த கோலத்தின் நடுவில் சிறிதளவு மாட்டுச்சாணம் வைத்து, அதில் பரங்கிப் பூ வைக்க வேண்டும். பிறகு வீட்டு வாசலில் தீபம் ஏற்றி வைத்தால் வீட்டுக்கு நல்லது என்கிறார்கள். இம்மாதத்தில் அனைவர் வீட்டு வாசலிலும் அழகிய கோலங்களும், தீபங்களும் அணிவகுத்து அழகுற காட்சியளிக்கின்றன.

மார்கழி ஸ்பெஷல் – சம்பா சாதம்

மார்கழி மாதத்திற்கென சிறப்பு பிரசாதமும் உண்டு. அது சம்பா சாதம். கோவில்களில் இந்தச் சாதம் பிர சாதமாக வழங்கப்படுகிறது. சுடசுடச் சாப்பிட நன்றாக இருக்கும். பச்சடி, அப்பளம்,  ஊறுகாய் எது வேண்டு மோ அது சேர்த்துச் சுவைக்கலாம்.

-ர.ரஞ்சிதா
படங்கள்: மீ.நிவேதன்


 
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close