Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சொர்க்க வாசல் திறப்பு: ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் குவிகின்றனர்!

திருச்சி: வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு விழாவினையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவி லுக்கு வரும் பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு விழாவினையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவர். இவர்களின் பாதுகாப்பிற்கு காவல்துறை பலத்த ஏற்பாடுகளை செய்யும். இந்தமுறை  மாநகர காவல்துறை சுமார் 4 ஆயிரம் காவலர்களை பாதுகாப்பிற் காக ஸ்ரீரங்கத்தில் குவித்துள்ளது.

பக்தர்கள் சிரமமின்றி கோவிலுக்கு வந்துசெல்ல, வழக்கமான பேருந்துகளோடு விழாக் கால சிறப்பு பேருந்து களையும் ஸ்ரீரங்கத்திற்கு மாநகரத்தின் மற்ற இடங்களிலிருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இலவச பேருந் து அம்மா மண்டபத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோவிலுக்கு இயக்கப்படுகிறது.

51 இடங்களில் தற்காலிக குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக கடந்த 30ந்தேதி யாத்ரீகள் நிவாஸ் தங்கும் விடுதி திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

நாடு முழுவதிலிருந்தும் பக்தர்கள் சொர்க்க வாசல் திறப்பு வைபவத்தைக் காண அலை அலையாகத் திரண்டு வந்து கொண்டு இருக்கிறார்கள். நாளை அதிகாலை (வியாழக்கிழமை) 4-45 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப் பட உள்ளது. இந்து அறநிலையத்துறை ஆணையர் தனபால் நேற்று யாத்ரி நிவாஸ் விடுதியில் அறைகள் பதிவை துவக்கி வைத்தார்.

-தே. தீட்ஷித்



 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ