Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்று பிக்பேங் தியரி...அன்று ஆரூத்ரா தரிசனம்!

ல கோடி ஆண்டுகளுக்கு முன் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது . அந்த வெடிப்பின் சிதறல்கள்தான் , நாம் வசிக்கும் பால் வழி மண்டலம் போன்று பல கோடி காலெக்ஸிகள் உருவாக்கத்துக்கான காரணம்.

அந்த வெடிப்பால் ஏற்பட்ட விசையால்தான் ஒன்பது கோள்களும் சுற்றிக் கொண்டிருக்கின்றது என்கிறது அந்த ஆய்வு. இது இந்த நூற்றாண்டின் சமீபத்திய கண்டுபிடிப்பு. ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தத் தகவலை நாங்கள் கண்டுவிட்டோமே! என அதிசயிக்க வைக்கிறது,நம் முன்னோர்களின் ஆன்மிக சிந்தனை.

அதற்கு சான்று ஆரூத்ரா தரிசனம் . சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை. ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாத திருவாதிரை நாளில் திருவாரூர் தியாகராஜர் கோயில் , தில்லை சிதம்பரநாதர் கோயில் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல சிவன் கோயில்கள் திருவிழா கோலம் கொண்டு சிறப்பு பூஜைகள் செய்யபட்டு நடராஜர் திருவீதி உலா சென்று மக்களுக்கு அருட்காட்சி தருவார்.

அம்பலக்கூத்தானுக்கு ஆண்டுக்கு ஆறு முறைதான் அபிஷேகம் நடக்கும். அதுவும் சிதம்பரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடக்கும் (ஆருத்ரா தரிசன) அபிஷேகம் மிகவும் விசேஷமானது. பால், தேன், பன்னீர், சந்தனம் முதலானவை குடம் குடமாக அம்பலக்கூத்தனுக்கு அபிஷேகம் செய்யப்படும்.

ஆருத்ரா என்பது திருவாதிரையைக் குறிக்கும்.உலக இயக்கத்துக்குக் காரணமான ஈஸ்வரனின் உன்னத நடனத் திருக்கோலத்தைச் சிறப்பிக்கும் திருநாள்தான் திருவாதிரை. மேலும் இந்தத் திருவாதிரை நட்சத்திரத்தன்றுதான் பதஞ்சலி முனிவருக்கும் வியாக்ரபாதருக்கும் திருநடனம் ஆடிக் காண்பித்தார் ஸ்ரீநடராஜ பெருமான் என்ற தகவலும் கூறப்படுகிறது.

ஆரூத்ரா தரிசனத்தின் பின்னணி குறித்து இலக்கியங்களிலும் , புராணங்களிலும் பல தகவல்களை பதிந்து வைத்திருக்கின்றனர் முக்கால புலவர்கள்.அவற்றிலிருந்து தெரியவரும் சில தகவல்கள் வியப்பளிக்கின்றன .

அவற்றில் கூறப்படுவதாவது: இறைவனின் பராக்கிரமத்தால் ஒரு பெரும் சக்தி கொண்ட வெடிப்பு ஏற்படுகிறது. அதனால் ஏற்பட்ட சக்தியால் கோள்கள் அனைத்தும் வேகமாக சுழலத் தொடங்கியது. இந்த சுழற்சியை தன் நடனத்தால் சிவ பெருமான் கட்டுபடுத்தி ஆக்கல், காத்தல்,மறைத்தல்,அழித்தல், அருளல் என ஐந்தொழிலைச் செய்து இந்த உலகை இயக்கி வருகிறார் என்கிறது முன்னோரது தத்துவம்.

ஐந்தொழிலை நடத்தியவாறே அவன் ஆடும் ஆற்புதத் தாணடவமே ஐந்தொழில் புரியும் ஆனந்த நடனமென்றும், பஞ்சகிருத்திய பரமானந்தத தாண்டவம் என்றும் போற்றப்படுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக நம் நாட்டில் வழிபாட்டு முறையில் இருக்கும் ஆரூத்ரா தரிசனத்தை சான்றாகக் கொண்டு நம் முன்னோர்கள் , மனித இனம் பண்படுவதற்க்கு முன்னரே அசகாய விஷயங்களை கண்டுபிடிக்கும் அளவுக்கு அறிவு முதிர்ச்சியும் , ஆன்மிக ஞானமும் பெற்றிருந்தனர் என்பது தெளிவாகிறது .

ஆனால் இந்த குறிப்புகள், முறையான வகையில் பாதுகாக்கப்படாததால் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதரிப் போய் அழிவின் விழும்பில் இருக்கின்றன என்பது வருத்தத்திற்குரிய விஷயம்.

இந்த ஆண்டு வரும் ஜனவரி 5ஆம் தேதி மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில் ஆரூத்ரா தரிசனம் நடை பெறவுள்ளது. இந்த நாளில் சிதம்பரம் சென்று ஸ்ரீநடராஜரைத் தரிசித்து வழிபட்டு வர, நம் இன்னல்கள் யாவும் அகன்று, வாழ்க்கை இனிமையாகும். ஆருத்ரா நாயகனைத் தரிசனம் செய்வோம்; அல்லல்கள் அகன்று சந்தோஷ வாழ்வைப் பெருவோம்.

-ரெ.சு.வெங்கடேஷ்
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ