Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆரூத்ரா தரிசன விழா

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று மார்கழி மாத ஆரூத்ரா தரிசன விழா வெகு விமர்சையாக நடை பெற்றது.

இவ்விழா, விக்னேஸ்வர பூஜை மற்றும் யாக பூஜைகளுடன் கடந்த மாதம் 25ந் தேதி தொடங்கியது.  27ந் தேதி நடராஜர் கோவில் முன்பு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, நடராஜருக்கு தினமும் காலை, மாலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெற்றது.

மாணிக்கவாசகர் நடராஜருக்கு காட்சியளித்தல் போன்ற ஐதீக நிகழ்வுகளும் நடைபெற்றது.

விழாவின் ஒன்பதாம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இத்தேரோட்டத்தில், விநாயகர் முதல் தேரி லும், முருகன் இரண்டாவது தேரிலும், நடராஜர் மூன்றாவது தேரிலும், சிவகாமிசுந்தரி அம்பாள் நான்காவது தேரிலும், சண்டீகேஸ்வரர் ஐந்தாவது தேரில் என நான்கு வீதிகளிலும் பவனி வந்தது. பக்தர்கள் அதைக் கண்டு பரவசமடைந்தனர்.

நிகழ்ச்சியில் கைலாய வாத்தியம் என்று அழைக்ககூடிய தமிழ் இசைக்கருவிகளைக் கொண்டு சிவபக்தர்கள் திருவாசகம், திருப்பாவை, தேவாரம் போன்றவற்றை பாடிமகிழ்ந்தார்கள்.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வான ஆரூத்ரா தரிசன விழா, இன்று அதிகாலை 2 மணிமுதல் 6 மணிவரை சாமிகள் ராஜசபை என்கிற ஆயிரங்கால் மண்டபத்தில் ஸ்ரீமந்நடராஜர் மூர்த்திக்கும், ஸ்ரீசிவகாமிசுந்தரி அம்பா ளுக்கும் மகா அபிஷேகத்துடன், திருவாபரண அலங்கார காட்சி மற்றும் சித்த சபையில் ரகசிய பூஜையும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மதியம் 2 மணிக்குமேல் நடராஜருக்கு கலி நெய் வைத்தியம் உட்பட 16 மகா அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மார்கழி மாத ஆருத்ரா மகா தரிசனம் நடைபெற்றது.

இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்து தரிசனம் பெற்றனர். இந்நிகழ்வினைத் தொடர்ந்து நாளை பஞ்சமூர்த்திகள் முத்து பல்லக்கு வீதியுலா நடைபெறுகிறது.

-க.பூபாலன்

படங்கள்: எஸ்.தேவராஜன்




 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ