Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஸ்ரீரங்கத்தில் தைத்தேர் உற்சவம்!

தைதேர் உத்சவம்கடந்த 25ஆம் தேதி ஆரம்பித்து நேற்று தேர் பவனியுடன் நிறைவடைந்தது. பூபதி திருநாள் என முதல் நாள் கூறப்படுகிறது. அன்று கொடியேற்றத்துடன் துவங்கப்பட்டது. அன்று முதல் தினமும் இரு வேளையும் பற்பல வாஹனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

தேர்  திருநாளுக்கு முந்தைய நாள் குதிரை வாஹனம் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.வையாளி எனப்படும் நிகழ்ச்சி நடைபெறும். வையாளி என்பது குதிரை வாஹனத்தில் பெருமாளை தூக்கிக்கொண்டு பலவாறாக வேகமாக ஓடுவார்கள். இதை காண திரளான மக்கள் கூடுவார். அடுத்த நாள் தேர்.

தைத்தேர் விழா நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நம்பெருமாள் உபயனாச்சிமார்களுடன் புறப்பாடு ஆனது. 5 மணியளவில் தைதேர் மண்டபம் சேர்ந்தார். 5.45 மணி முதல் 6.30 மணிவரை ராதாரோஹனம். 6.30 மணிக்கு சரியாக தேர் வடம் பிடிக்கப்பட்டது.மக்கள் வெள்ளத்தில் தேர் புறப்பட்டது. குழந்தை முதல் பெரியவர் வரை கூடி தேர் இழுத்தனர். 'ஊர் கூடி தேர் இழுக்கனும்" என்னும் பழமொழியை ஏற்று ஸ்ரீரங்கம் தேர் ஆடி ஆடி உத்திர வீதிகளில் வலம் வந்தது. பல முன்னேற்பாட்டுடன் தேர் பவனி நடந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடபெற்றது. போலீஸ் மிகுந்த் விழிப்புடன் செயல்பட்டது. தேர் இழுப்பவர்கள் உற்சாகமுடன் இழுத்தனர்.

முதலில் ஆண்டாள் யானை கம்பீரத்துடன் நடந்து வந்தாள். யானை முகாம் சென்று வந்த உற்சாகம் அவளிடம் இருந்தது. புதியதாக அவளுக்கு அவளது பெயர் பதித்த டாலர் கொண்ட மாலை ஒன்று அணிந்திருந்தாள். அவளை தொடர்ந்து குதிரை ஹரி. பின்னே பாகவதர்கள் வேதங்களை பாரயணம் செய்த்து வந்தனர். பெண்கள் கும்மி அடித்து அடியும் பாடியும் வந்தனர். எங்கும் ஒரே ரெங்கா ரெங்கா கோஷம்.தேர் வந்த அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. பக்கத்து நாச்சயாருடன் கண்கொள்ளா காட்சியாக இருந்தது.உத்திர வீதிகளில் வாசல் கொள்ளாமல் கோலம் போடப்பட்டு அரங்கனை வரவேற்றனர் அத்தெருவாசிகள். வீடெங்கும் உள்ள மக்கள் பழம் தேங்காய் போன்றவற்றை நைவேத்தியம் செய்தனர், கற்பூர ஆரத்தி காட்டினார். மிகுந்த ஆரவாரத்துடன் காணப்பட்டது.  தேர் மீது பெருமாளுக்கு பின்னே மங்கள் வாத்தியங்கள்  நாதஸ்வரம் இசை வாசிக்கப்பட்டது.

தேர் நகர முன்னே வடம் பிடித்து இழுக்கப்படுகின்றது. பின்னிருந்து தள்ள "சன்னக்கட்டை" போடப்படுகிறது. இது என்னவென்றால்  தேரின் நான்கு சக்கரத்தில் பின் இரண்டு சக்கரத்தில் ஒரு ஸ்டாண்டு போன்ற கட்டையை வைத்திருப்பார்.  அதில் ஒரு நீண்ட கட்டை செருகப்படும்.  5 பேர் ஒருவர் பின் ஒருவராக அமர வசதியாக அந்த கட்டை இருக்கும். அமர வசதியான முட்டுகள் தரப்பட்டிருக்கும். சக்கரத்திற்கேற்ப தடிமனாக இருக்கும். அது பின் இரண்டு சக்கரங்களுக்கு பொருத்தப்பட்டு இளைஞைர்கள், நடுத்தர வயது ஆண்கள் ஏறி அமர கயிறு கட்டி கீழே இழுக்கப்படும்.. இதன் மூலம் சக்கரங்களுக்கு முட்டு தரப்பட்டு முன்னேறும்.ஒவ்வொரு முறையும் தேர் நகர முன்னே மக்கள் இழுக்க பின்னே சன்னகட்டை போடப்படும். உற்சாகமான இளைய தலைமுறையினர் இதில் ஈடுபட்டனர். நான்கு வீதிகளிலும் உள்ள நான்கு திருப்பங்களிலும் இதன் அவசியம் அதிகமாக இருக்கும்.அடுத்தாக பாதுகாப்பு அம்சம் மிகுந்த நேர்த்தியாக இருந்தது. தேர் வரும் வீதியில் ஜன நெரிசலை கட்டுப்படுத்தி அழகான அமைதியான முறையில் நடைபெற காவல் துறை மிகுந்து செயல்பட்டது. தேரை சுற்றி கயிர் தடுப்பு அமைத்து அதை பிடித்துக்கொண்டே நின்றனர். ஆனால் இதன் மூலம் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் இருந்தது. தண்ணீர் வழங்க ஒரு சிறிய டெம்போ வேன், முதலுதவி செய்ய ஆம்புலன்ஸ் வசதியுடன் டாக்டர்கள் இருந்தனர். மேலும் சித்தா முறையில் முதலுதவி செய்ய சித்த மருத்துவர் தயாராக இருந்தார். மேலும் அவர் பொது நலத்துடன், கூட்டத்தில் திருட்டு பயம் அதிகம் என பல மொழிகளில் எச்சரித்துக்கொண்டே வந்தார்.

முறையான திட்டமிட்டல், சரியான அதிகாரிகள் என மிகுந்த சிறப்பாக நடந்து முடிந்தது. 10.30 மணிக்கு நிலைக்கு வந்தது. பின்பு ஜீயர் மரியாதையை தொடர்ந்து  பொதுமக்கள் தரிசனம் நடந்தது. மதியம் 2 மணியளவில் தேரிலிருந்து இறங்கி "கதிர் அலங்காரத்தில்" சேவை சாதிப்பார். தை மாதம் முதல் அறுவடை நடந்து அதை பெருமாளுக்கு அர்ப்பணிப்பர். அதனை தொடர்ந்து திருமஞ்சனம் நடந்து மூலஸ்தானம் சேர்வார்.
                                                                                                
மு.கோதாஸ்ரீ
படங்கள்:தி.கௌதீஸ்

(மாணவ பத்திரிகையாளர்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close