Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

தொண்டை மண்டலத்தில் வேதபுரி (புதுச்சேரி) என்று அழைக்கப்படும் நகரத்தில் அனைவருக்கும் அருள் பாலிக்கும் கணபதிக்கு மிகவும் புகழ்பெற்ற “மணக்குள விநாயகர்” திருக்கோயில் கும்பாபிஷேகம் இன்று வெள்ளிக்கிழமை புதுச்சேரி முதலமைச்சர் தலைமையில் வெகு சிறப்பாக நடந்தது.

600 ஆண்டுகளுக்கு முன் பிரெஞ்சுக் காரர் களின் ஆட்சியில் கடற்கரைக்கருகில் உள்ள “மணல்” நிறைந்த “குளத்தின்” கரை யில் அமைந்து மக்கள் வழிபட்டு வந்த விநாயகரை, அன்றைய பிரெஞ்சு அரசு, அந்த இடத்தில் கட்டடம் கட்டுவதற்காக விநாயகர் சிலையை, அருகில் உள்ள கடலில் போட்டதாகவும் அது மீண்டும் மிதந்து கரைக்கு வந்ததாகவும் சொல்லப் படுகிறது.

இதுபோல் மூன்று முறை செய்ய, மூன்று முறையும் கரைக்கு திரும்ப வந்ததால் அதன் மகிமை உணர் ந்து அந்த இடத்தில் கோவில் அமைத்ததாக இந்த கோவிலின் ஸ்தல வரலாறு கூறுகிறது.

இத்துடன் இந்த கோவிலுக்கு மற்றொரு சிறப்புண்டு. புதுவை மற்றும் அதன் சுற்றுபுறத்தில் வாழ்ந்த 30க்கும் மேற்பட்ட சித்தர்களில் தொல்லைக்காது சித்தர் சுவாமிகள் மணக்குள விநாயகரால் கவரப்பட்டு அவரை தினசரி தரிசனம் செய்தார். அவர் வேண்டுகோளை ஏற்று அவர் இறந்த பிறகு அந்த கோவிலுக்கு அருகிலேயே அவரை அடக்கம் செய்தனர்.

கோவில் வளாகத்தில் சுற்றுச்சுவர்களில் பலவிதமான கணபதியின் சுதை ஓவியங்கள், 27 நட்சத்திர அதிபதி களின் ஓவியங்கள், முருகனின் அறுபடைவீடுகள், மற்றும் பல கண்கவர் ஓவியங்கள் என ஒரு கொலு மண் டபமாகவே திகழ்கிறது.

இத்திருக்கோவிலின் இன்னுமொரு சிறப்பம்சம் என்னவென்றால், கோவிலில் தங்கரதம் மற்றும் வெள்ளி ரதம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் கோபுரமே தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது.

புதுவையில் 1908 முதல் 1918 வரை பத்து ஆண்டுகள் தங்கி இருந்த “முண்டாசுக்கவிஞன்’ பாரதி , இந்த விநாயகரை போற்றி;  “நான்மணிமாலை” என்ற தலைப்பில் 40 பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- சு. கற்பகம் ( மாணவப் பத்திரிக்கையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ