Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தொடங்கியது மதுரை ஶ்ரீ மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா!

மதுரை என்றாலே திருவிழாவும் கொண்டாட்டமும் தான் நம் நினைவுக்கு வரும். ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் மதுரை மாநகரின் வாழ்க்கை முறையில் ஒன்றியிருந்தாலும், மதுரை மட்டுமல்ல உலக பக்தர்கள் அனைவரும் ஆவளுடன் காத்திருக்கும் ஒரு பெருவிழா சித்திரைத் திருவிழா. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், திருமாலிருஞ்சோலை அழகர் வைகை எழல் வைபவம் என மதுரையே களைகட்டி இருக்கும். அந்த பரவச காட்சியைக் காண நேரம் இதோ இன்று வந்துவிட்டது. மதுரை ஶ்ரீ மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று காலை 11 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது சித்திரைத் திருவிழா.

பத்து நாட்கள் நடக்கும் இத்திருவிழாவின் முதல் நாளான இன்று கற்பக விருட்ச வாகனத்தில் சிவனாரும், சிம்ம வாகனத்தில் அம்பாளும் வீதியுலா வருவார்கள். பஞ்சமூர்த்தி புறப்பாடாக, நான்கு மாசி வீதிகளிலும் வருகிற ஸ்வாமியையும் அம்பாளையும் பார்க்க பிறவி பயன் முழுமையடையும்.

2-ம் நாள் காலையில், தங்கச் சப்பரத்தில் வீதியுலா. மாலையில், ஈசன் பூத வாகனத்திலும், அன்னவாகனத்தில் அம்பாளும் வீதியுலா வருவார்கள். இதைத் தரிசித்தால், ஒரு தேசத்தின் நெற்களஞ்சியம், எப்போதும் நிறைந்திருக்கும். குறிப்பாக, உணவுப் பஞ்சமே இருக்காது.

3-ம் நாள் காலையில், தங்கச் சப்பரத்தில் வீதியுலா. மாலையில், திருக்கயிலாய பர்வத வாகனத்தில் (ராவணேஸ்வர வாகனம்) ஸ்வாமியும், காமதேனு வாகனத்தில் உமையவளும் திருவீதியுலா வருவார்கள். இதைத் தரிசித்தால், எம பயம் விலகும்; தீய சக்திகள் அழியும்; வீட்டில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும்.

4-ம் நாள், காலையிலும் மாலையிலும் தங்கப் பல்லக்கு வாகனம். இந்த நாளில், நான்கு வீதிகளைக் கடந்து, எல்லை கடந்து, பாகற்காய் மண்டபத்தில் தரிசனம். ஒருகாலத்தில், பாகற்காய் வியாபாரிகள் நன்றாக விளைச்சல் நடந்து, லாபம் கொழித்து, இங்கு மண்டகப்படி செய்து, நேர்த்திக்கடனைச் செலுத்தினார்கள். அந்த மரபில், இப்போதும் வியாபாரிகள் பலரும் இணைந்து, தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தி வருகிறார்கள்.

5-ம் நாள், காலையில் தங்கச் சப்பரத்தில் வீதியுலா. மாலையில் ஸ்வாமியும் அம்பாளும் தங்கக் குதிரையில் வீதியுலா வருவார்கள். இந்தத் தங்கக் குதிரை, மிகப் பிரமாண்டமானது. இரண்டு முன்னங்கால்களையும் தூக்கி, கண்களை உருட்டியபடி, தாவி வருகிற குதிரையை அருகில் இருந்து பார்த்தால், பயந்தே விடுவோம். அத்தனைத் தத்ரூபமாக இருக்கும், தங்கக் குதிரை!

6-ம் நாள், காலையில் வழக்கம்போல தங்கச் சப்பரத்தில் வீதியுலா. மாலையில் தங்க ரிஷபத்தில் ஸ்வாமியும், வெள்ளி ரிஷபத்தில் அம்பாளுமாக வீதியுலா வருவார்கள். அப்போது, ஞானசம்பந்தர் வெப்பு நோய் தீர்த்தல், சமணர் கழுவேற்றுதல் ஆகியவை ஓதுவாரால் பாடப்படும்.

7-ம் நாள், பிட்சாண்டவர் புறப்பாடு. ரிஷி பத்தினிகளின் ஆணவத்தைப் போக்கும் வைபவம். இதைத் தரிசித்தால், நம்மிடம் உள்ள கர்வம், பொறாமை, ஆணவம், அலட்டல் யாவும் நீங்கிவிடும் என்பது ஐதீகம். மாலையில் நந்தி வாகனத்தில் சிவனாரும், யாளி வாகனத்தில் அம்பிகையும் வீதியுலா வருவார்கள்.

8-ம் நாள், ஊடல் உத்ஸவம். இந்த நாளில், கோயிலின் பிராகாரத்தில் ஸ்ரீநடராஜரின் புறப்பாடு விசேஷமாக நடைபெறும். ஸ்வாமி சந்நிதிக்கு அருகில் உள்ள மண்டபத்தில், பல்லக்கில் உலா வருவார் சிவனார். அன்றைய மாலை வேளையில், வெள்ளி சிம்மாசனத்தில் ஸ்வாமி, அம்பாள் புறப்பாடு இருக்கும். மதுரையை மட்டுமின்றி, உலகையே ஆளும் பட்டத்தரசியான ஸ்ரீமீனாட்சி அம்பாளுக்கு பட்டாபிஷேக வைபவம். சிரசில் ராஜகிரீடம், திருக்கரத்தில் செங்கோல், கண்களில் பேரொளி, உதட்டில் புன்னகை எனக் காட்சி தரும் தேவியையும், அருகில் அத்தனையையும் ஏற்றுக்கொண்டு, அம்பிகையை மணம் புரியும் பூரிப்பில் இருக்கிற ஸ்ரீசொக்கநாதரையும் கண்டு, நாம் சொக்கிப் போவோம். காலை, மாலை இரண்டு விழாக்களையும் எவர் தரிசிக்கிறார்களோ, அவர்கள் தம்பதி ஒற்றுமையுடன் வாழ்வார்கள், இல்லறம் செழிக்க வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

9-ம் நாள், மரச் சப்பரத்தில் வீதியுலா! மாலையில், பட்டமகிஷி மீனாட்சியம்மை, இந்திர விமானத் தேரில் திக்விஜயப் புறப்பாடு. கையில் செங்கோல் ஏந்தி, எட்டுத் திக்கிலும் உள்ள அஷ்டதிக் பாலகர்களை வென்று, ஈசானத்தையும் ஜெயித்து, கயிலாயத்தில் அதிகார நந்தியையும் தோற்கடித்த நன்னாள். அப்போதுதான் மீனாட்சிக்கு, தான் சிவனாரின் மனைவி என்பதே தெரியவரும். சிவனாரின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று.

10-ம் நாள், ஸ்வாமி- அம்பாள் திருக்கல்யாணம். பட்டினப் பிரவேசம் எனப்படும் மாப்பிள்ளை அழைப்பு, மாலையில் பூப்பல்லக்கில் அம்பாளும், யானை வாகனத்தில் ஸ்வாமியும் வீதியுலா வருவார்கள். 'திருக்கல்யாண வைபவத்தைத் தரிசனம் செய்தால், திருமண தோஷங்கள் அகலும்; தடைகள் யாவும் நீங்கும்; நல்ல அன்பான கணவனை பெண்களும், பண்பான மனைவியை ஆண்களும் அடைவார்கள்.

பத்து நாள் முடிந்ததும் மதுரை ஓய்ந்துவிடுமா என்ன? அடுத்து வருகிறாரே அழகர் பெருமாள். அது சரி தூங்கா நகரத்துக்கு ஏது தூக்கம்!

 படம்: மீ.நிவேதன்

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ