Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வீரபாண்டியில் ஒரு உற்சாக திருவிழா

மிழகத்தின் முக்கிய கோவில் திருவிழாக்களில் வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. முல்லை பெரியாற்றின் கரையில் மிகுந்த வனப்புடன் கூடிய வயல்வெளிகளுக்கு நடுவே அமைந்த இக் கோவிலில், வருடம்தோறும் சித்திரை மாதம் வெகு விமரிசையாக  8 நாட்கள் விழா கொண்டாடப்படும்.

தேனி மாவட்டம் மட்டுமின்றி திண்டுக்கல், பழனி, கோவை, திருப்பூர், மதுரை, சிவகாசி, விருதுநகர், மற்றும் கேரளாவின் இடுக்கி மாவட்டம் முழுவதும் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்று சேரும் விழாவாக இருப் பதால் 8 நாட்களும் பல லட்சக்கணக்கான மக்கள் திரணட வருவர் இந்த விழாவிற்கு.

விழாவில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலாக தீச்சட்டி எடுத்தல், ஆயிரம் கண் பானை எடுத்தல், அலகு குத்துதல், பூக்குழி இறங்குதல், மாவிளக்கு, கிடாவெட்டு என அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவர்.

விழாவில் கேளிக்கைகளுக்கும் குறைவில்லை. வட நாடுகளில் இருந்து வந்த சர்க்கஸ், ராட்டினம், மற்றும் சாகச நிகழ்ச்சிகள் என்று மக்கள் கூட்டம் களைகட்டும். பக்தர்களின் வசதிக்காக தேனி மாவட்டத்தின் அனைத்து பகுதியில் இருந்தும் கோவிலுக்கு சிறப்பு பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படுகிறது. சிறப்புமிக்க இந்த விழா மே 12 ஆம் தேதி துவங்கி 19 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. 

செய்தி மற்றும் படங்கள்: வீ. சக்தி அருணகிரி 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ