Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கஜேந்திர மோட்சம்!

ஜேந்திர மோட்சம் என்பது பெருமாளான விஷ்ணு, முதலையின் பிடியில் சிக்கிய கஜேந்திரன் என்னும் யானைக்கு மோட்சம் அளித்த பாங்கை கூறும் ஒரு உற்சவம். சித்ரா பவுர்ணமி அன்று ஸ்ரீரங்கத்தில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும் இந்த உற்சவத்தின்போது,  எம்பெருமான் அம்மாமண்டபம் படித்துறைக்கு வந்து யானைக்கு மோட்சம் அளிப்பார்.

கஜேந்திர யானையாக தற்போது கோவிலில் கைங்கரியம் செய்து வரும் ஆண்டாள் யானைக்கு மோட்சம் அளிப்பதாக நிகழ்வு நடக்கும்.

இந்த கஜேந்திர மோட்சமானது பாகவத புராணத்தில் 8 ஆவது ஸ்கந்தத்தில் வரும் பகுதி. இதை பரீட்ஷித்த மன்னருக்கு ஸ்ரீசுகர் அருளினார்.  "கஜேந்திரன் என்னும் பெயர் கொண்ட யானை துமதா என்னும் வனத்தில் வாழ்ந்து வந்தது.அந்த துமதா வனத்தை வருணபகவான் திரிகூடமலை என்னும் இடத்தில் உருவாக்கினார். கஜேந்திரன் தனது யானை கூட்டத்தில் வாழ்ந்து அக்கூட்டத்தின் தலைவனாகவும் விளங்கியது.

ஒரு நாள் தாகம் தணிக்க  தனது யானை கூட்டத்துடன்  நீர்நிலையை நோக்கி சென்றது. அப்பொழுது அந்த குளத்தில் வாழும் ஒரு முதலை கஜேந்திரனின் கால்களை பற்றியது. முதலையின் வாயில் அகப்பட்ட கால்களுடன் உயிருக்கு போராடிய கஜேந்திரனை மற்ற யானைகள் காப்பாற்ற முயன்று தோல்வியுற்றன.  தனது இறுதி காலம் நெருங்குவதை உண்ர்ந்த யானை, ஒரு தாமரை மலரை தனது தும்பிக்கையால் பற்றி வான் நோக்கி ஆதிமூலமே என பெருமாளை அழுது வேண்டியது.

தனது பக்தனின் துயர் துடைக்க விரைந்து வந்த விஷ்ணு, சுதர்ஷன சக்கரத்தால் முதலையின் தலையை துண்டித்து யானையை விடுவித்து மோட்சம் அளித்தார்.

இதில் யானையாக கூறப்பட்ட கஜேந்திரன் தனது பூர்வ ஜென்மத்தில் அரசன் இந்திரதுய்மனாக நாட்டை ஆண்டு வந்தார். இவர் ஒரு சிறந்த விஷ்ணு பக்தனாக விளங்கினார். ஆனால் அகந்தை இவர் கண்களை மறைக்க, அகஸ்திய முனிவரின் சாபத்தால் யானையாக பிறப்பெடுத்து, பின் இறைவனால் அகந்தை ஆணவம் அழிக்கப்பட்டு, மோட்சம் கிடைக்கப்பெற்றார். முதலையின் பிடியில் இருந்த கஜேந்திரன், விஷ்ணுவை நோக்கி துதித்த பாடல், கஜேந்திர ஸ்துதியாக போற்றப்படுகிறது. இது சஹஸ்ரநாமத்தில் முதல் ஸ்லோகம். 

முதலையாக சாபம் பெற்றது ஒரு கந்தர்வன். ஒரு முறை முனிவர் தேவலா அவரை காண வந்தார். இரு வரும் சேர்ந்து நீராடினர். முனிவர் சூரியநமஸ்காரம் செய்கையில் விளையாட்டாக கந்தர்வன், அவரது கால்களை இழுத்தார். இதில் கோபமடைந்த முனிவர், முதலையாக பிறப்பாய் என சாபமிட்டார்.

தன் தவறை உணர்ந்த கந்தர்வன் சாப விமோசனம் வேண்டினான். பிறவியின் முடிவில் கஜேந்திரன் கால்களை பிடிக்க, விஷ்ணுவால் சாப விமோசனம் பெறுவாய் என கூறினார்.

அதன்படி கந்தர்வனும் அரசனும் முறையே முதலையாகவும், யானையாகவும் பிறவியெடுத்து தங்களது சாப விமோசனத்தை பெற்றனர். இந்த நிகழ்வு ஸ்ரீரங்கம் காவிரிக் கரையில் நடந்தது. அதை நினைவுக்கூரும் வகையில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் கஜேந்திர மோட் சம் நடை பெறும்.

இதைக் காண பெருவாரியான பக்தர்கள் திரண்டு, தங்களுக்கு மோட்சம் அளிக்க வேண்டும் என வேண்டிக் கொள்வர்.

-மு.கோதாஸ்ரீ ( மாணவப் பத்திரிக்கையாளர்)
படங்கள்; தே.தீட்ஷித்
   

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close