Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புனிதத் தலங்களை புகைச்சல் தலங்களாக்கும் பகல் கொள்ளை!

புனித தலம் என்றாலே... புகைச்சல் தலங்களாக ஆக்கிவிடுகிறார்கள் மோசடி வியாபாரிகள் சிலர். ஆன்மிக தேடல் என்றபடி புகழ்பெற்ற ஆலயங்களை நோக்கிச் சென்றால், அங்கே நடக்கும் பலவித மோசடி மற்றும் கொள்ளைகள், அந்தப் பயணத்தின் நோக்கத்தையே சிதைத்து விடுகின்றன. இதற்கு இந்து ஆலயங்கள் இருக்கும் ஊர்கள் மட்டுமல்ல, கிறிஸ்தவ ஆலயம் இருக்கும் வேளாங்கண்ணியும் விதிவிலக்கல்ல.

இங்கே மூலைக்கு மூலை இலவசமாக தண்ணீர் தரும் இயந்திரத்தை வைத்திருக்கிறார்கள். இதை நிறுவிய நிறுவனத்தின் பெயரும் வண்ணத்தில் மினு மினுக்குகிறது இயந்திரங்களின் மீது. ஆனால், ஓரிடத்தில்கூட இந்த இயந்திரத்தில் தண்ணீர் வரவே இல்லை. கடைகளில் விற்கும் பாட்டில் தண்ணீரை வாங்கிக் குடித்தால்தான் வந்தவர்களின் பாவம் தீரும் என்று அந்த மேரி மாதா, இந்த வேளாங்கண்ணி ஆலய நிர்வாகிகளிடம் ஏதும் சொல்லிவிட்டாரோ என்னவோ!

இங்கே இருக்கும் மாதா குளத்துக்கான பாதை தொடங்கும் இடத்தில், 'இது புனித பாதை... இங்கே வியாபாரம் செய்யக்கூடாது!' என்று தொடங்கி வரிவரியாக எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால், அந்த பாதையின் இடையே ஆலய நிர்வாகத்தின் அனுமதியோடு வியாபாரம் ஜரூராக நடக்கிறது.  40 ரூபாய் எம்.ஆர்.பி போட்டிருக்கும் ஐஸ் க்ரீமை 60 ரூபாய்க்கு விற்கிறார்கள். பத்து ரூபாய் போட்டிருக்கும் பிஸ்கட்டை, 20 ரூபாய்க்கு விற்கிறார்கள். முப்பது ரூபாய் மிரண்டா பாட்டில் 50 ரூபாய் என்று எல்லாவற்றிலும் நூறு சதவிகிதம் வரை விலையை ஏற்றி வைத்துக் கொள்ளையடிக்கிறார்கள்.

"என்னங்க இது எம்.ஆர்.பி-யை விட இவ்வளவு ரூபாய் அதிகமா வாங்கறீங்களே?" என்று கேட்டால்...
"எங்க முதலாளி அப்படித்தான் வாங்கச் சொல்லியிருக்கிறார்... இதுக்கு மேல அவர்கிட்டதான் கேக்கணும்" என்று பதில் வருகிறது. பார்த்தால், இவர்தான் முதலாளி போல தெரிந்ததால்... "சரி, முதலாளி எங்க இருக்கார்?" என்று அடுத்த கேள்வியைப் போட்டோம்.

"இருக்கிற இடத்துல இருப்பார்... அதெல்லாம் எனக்குத் தெரியாது" என அடுத்த பதில் பாய்ந்து வருகிறது.

மேரி மாதாதான் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்!

-எஸ். கதிரவன்

படங்கள்: க.சதீஷ்குமார்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close