Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மதங்களும் மத நம்பிக்கைகளும் அவசியம்தானா? (இன்று ஒரு தகவல்-2)

மதம் என்பது நம்மை உயர்த்திக் கொள்ள உதவும் சாதனமாகும். மதவேற்றுமைதான் நமக்கு எதிரியே தவிர, மதங்களை காரணமாகச் சொல்லமுடியாது. மனிதனுடைய மனதை மிகப் பக்குவமான நிலையில் வைக்கக்கூடியது ஆன்மிக உணர்வுதான். வேறு எந்தக் கொள்கையும் அந்த அளவுக்கு ஒன்று சேர்ப்பதில்லை. மனிதகுல சரித்திரத்தில் வெவேறு நாடுகளிலும் மனிதர்களை ஒற்றுமைப் படுத்திய மிகப்பெரிய தலைவர்கள்,கடவுளின் பெயரைக் கொண்டே அவ்வாறு செய்திருப்பதைப் பார்க்கலாம்.

ஒருசில தலைவர்கள் உலக வாழ்க்கையை முறைப்படி வாழ்ந்துகொண்டு,ஒழுக்கத்துடன் இருந்து மக்களை வழிநடத்தி இருக்கக்கூடும் .மக்களை தமது காந்த சக்தியால் கவர்ந்து, அவர்களுடைய மனதில் ஆர்வத் தீயைக் கொழுந்து விட்டு எரியச் செய்யக்கூடிய மகான்கள், தமது ஆன்மிக சக்தியாலும் பின்னணியாலுமே அப்படி ஒரு சாதனையைச் செய்து காட்டி இருக்கிறார்கள்.


மதத்தைப் பின்பற்றுவது என்பது மக்களின் பிறப்புரிமை.அது மனித மனதில் எழுப்பக்கூடிய சக்தி மகத்தானது. சமூகத்தில் கட்டுப்பாட்டைக் காக்கவும், ஒழுக்கத்தை வளர்க்கவும்,மதம் உதவும் அளவுக்கு சட்டம் உதவமுடியாது. தனது தாய்நாட்டை தெய்வமாகக் கருதி அதன்மீது பக்தி கொண்டவனே, எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயங்காதவனாக வாழ்கிறான்.

பிறரிடம் அன்பு காட்டி நல்ல காரியங்களைச் செய்வதையும், ஏழை எளியவர்களிடம் கருணை காட்டுவதையும் புண்ணியமாகக் கருதுகிறான்.ஆனால், இந்த மகத்தான மதம் என்னும் சக்தியைத் தவறான வழியில் பயன்படுத்தி, அதன் அடிப்படையில் சண்டை சச்சரவுகளை வளர்த்தால்,அதுவே நம்மை அழித்துவிடக் கூடும்.


- சுவாமி விவேகானந்தர்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ