Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நோய் தீர்க்கும் இரட்டையர்கள்!


ரச மரமும், வேப்ப மரமும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து இருப்பதை பல கோவில்களில் பார்க்கலாம். அரச மரம் வளர்ந்த இடத்தில் தவறுதலாக வேப்ப மரம் முளைத்திருக்கும் என்றுதான் நினைப்போம்.

பொதுவாக அரச மரத்தை சிவனின் வடிவமாகவும், வேப்ப மரத்தை உமையவளின் வடிவமாகவும் இந்துக்கள் வழிபடுகிறார்கள். ஒவ்வொரு கோவிலுக்கும் தலவிருட்சம் என்ற பெயரில், விருட்சங்களை தெய்வங்களின் உறைவிடங்களாக்கி வழிபடுகிறார்கள். அந்தவகையில் அரச மரமும், வேப்ப மரமும் பின்னிப்பிணைந்த இடம், விநாயகருக்கு மிகவும் பிடித்த இருப்பிடமாகும். கணபதி வீற்றிருக்கும் அரச மரத்தை பெண்கள் சுற்றி வந்தால் பிள்ளைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இதை அறிவியல்பூர்வமாக பார்த்தால், அரச மரத்திலிருந்து வெளிவரும் காற்று அல்லது அரச இலையின்மீது பட்டு வீசும் காற்று கர்ப்பப்பை கோளாறுகளை போக்கும் தன்மை படைத்தது. அத்துடன், மூளையின் செயல்பாடுகளைத்தூண்டி, மன அமைதியைக் கொடுக்கும் குணமும் இதற்கு உண்டு. மேலும் மரங்களிலேயே அரச மரமும், வேப்ப மரமும்தான் 24 மணி நேரமும் பிராண வாயுவை (ஆக்சிஜன்) வெளியிடும் தன்மையுள்ளவை.

இந்த இருமரங்களும் இருக்கும் இடத்தில் ஒரு உயிரியல் மின்சக்தி இருக்கும். இந்த மரங்களில் இருந்து கிடைக்கும் காற்று மனிதனின் நாளமில்லா சுரப்பிகளை தூண்டக்கூடியது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கும்.

- எம்.மரிய பெல்சின்

படங்கள்- வீ.சக்தி அருணகிரி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ