Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மலைக்கோவில் தரிசனம்... மலையளவு பலன்!

 
ன்றைக்கு மாடிப்படி ஏறினாலே நமக்கு மூச்சு முட்டுகிறது. ஆனால் நம் பாட்டன் பூட்டன்கள் காட்டுப்பாதைகளைக் கடந்து, கரடு முரடு மலைகளில் ஏறி கம்பீரமாக நிற்கும் சிகரத்தில் குடிகொண்டிருக்கும் இறைவனை தரிசித்துவிட்டு திரும்பியதை கதை கதையாக சொல்லக் கேட்டிருப்போம்.
 
"என்னுடைய தாத்தா கம்பு விதைத்துவிட்டு திருப்பதி கிளம்புவார். நடைபயணம் சென்று, உச்சிமலை ஏறி அவர் திரும்பி வருகையில் கதிர் விளைந்திருக்கும். வந்ததும் அறுவடைக்கு தயார் ஆவார்...'' என கிராமத்து அம்மாக்கள் பூரிப்புடன் சொல்வார்கள். 
 
இன்றைக்கு ரோப் கார்கள் மூலம், மூலவர் வரை செல்லும் வசதியை விஞ்ஞானம் வந்துவிட்டாலும், இப்போதும் பலர் திருப்பதிக்கும், சபரிமலைக்கும், பழனிக்கும் நடைபயணமாக சென்று மலை ஏறி இறைவனை தரிசித்து வருகிறார்கள்.
 
பொதுவாக மலைகளில் உள்ள மூலிகைகள் உடலுக்கு நன்மையும், அங்கு நிலவும் சூழல் மனதுக்கும் அமைதியும் தரும் என்பதால் மலைப் பயணங்களை மைன்ட் ரிலாக்ஸ் பயணங்களாகவே கைகொண்டார்கள் நம் முன்னோர்கள்.
உதாரணமாக சதுரகிரி மலையில் காணப்படுகிற மூலிகைகளும், தீர்த்தங்களும் பல நோய்களை தீர்க்கும் குணமுடையது. இந்த மலையின் மூலிகை கலந்த காற்றுபட்டால் பல நோய்கள் குணமாவதாக பலரும் அனுபவங்களை சொல்லக் கேட்டிருக்கலாம். 
 
அதேபோல், 'பழநியில் கால்வைத்தாலே பாதி நோய்கள் தீர்ந்து விடும். உச்சிமலை ஏறிவிட்டால் மொத்த நோயும் குணமாகும்' என்பார்கள். ஒரு கோயிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பவை அங்குள்ள சிலை, தீர்த்தம், அமைவிடம் ஆகியவை.  அந்த வகையில் பழநி கோயிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பது நவபாஷாண சிலை. 
 
இப்படி திருப்பதி, சபரிமலை என கைலாயம் வரை அதன் மகிமைகளையும், சிறப்புக்களையும் சொல்லிக்கொண்டே போகலாம். வாகன வசதிகள் இல்லாத காலத்தில் மாதக் கணக்கில் மலை கோயில்களுக்கெல்லாம் நடந்தே சென்று இறை தரிசனம் செய்தார்கள். அதுபோல நாம் இப்போதும் நடந்தே செல்ல வேண்டும் என்பதில்லை. ஆனால் படியேற இயலாதவர்கள், வயதானவர்கள் தவிர மற்றவர்கள் ரோப் கார்களை தவிர்த்து படிக்கட்டுகளில் ஏறி இறங்கினால் பயணத்தின் நிஜமான பலனை அடையலாம். 
 
இன்றைய வணிக யுகத்தில்,  மலையேறுதலை ஒரு பயிற்சியாகவும் பாடமாகவும் பயிற்றுவிக்கிறார்கள். மலையேற்றம் என்பது உடல் தசைகளை வலிமைப்படுத்துவதாகவும், ரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதாகவும் மருத்துவர்களும் சொல்கிறார்கள். தைரியத்தையும், தன்னம்பிக்கையையும், மனோதிடத்தையும் அதிகரிக்க மலையேற்றம் உதவுவதாக உளவியல் ரீதியாகவும் சொல்லப்படுகிறது.
 
மொத்தத்தில் இயற்கை எழில் சூழ்ந்த மலை  உச்சிகளில், நம் முன்னோர்கள்   வழிபாட்டு தலங்களை அமைத்ததன் காரணத்தை புரிந்துகொண்டால் மலைக்கோவில் தரிசனம் மனதிற்கும், உடலுக்கும் நலம் தரும் என்பதில்  மாற்றுக் கருத்து இல்லை. 
 
-கா.முத்துசூரியா

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ