Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'சார்வாகம்' தத்துவத்திற்கும் பெரியாருக்கும் என்ன தொடர்பு?

 

 
த்துவம்  என்றால் உண்மை என்று பொருள். ஆதி மனிதன் சிந்திக்க துவங்கியதில் இருந்துதான் தத்துவங்கள் தோன்றியது. பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்ட மாற்றகளால் ஏன், எதற்கு, எப்படி என பல்வேறு கேள்விகள் மனிதனுக்குள் எழுந்துகொண்டே இருந்தது. இதற்கான பதில்களைத் தேடியபோதுதான் தத்துவங்கள் பிறந்தது. தேடுதலால் புதுப்புது அனுபவங்கள் கிடைத்தன. இந்த அனுபவத்தால் மனிதனின் வாழ்வு செம்மையானதுடன், ஒரு வழிமுறையும் தோன்றியது. 
 
இதைபற்றிப் பேசிய சென்னை பல்கலைக்கழகத்தின் கெளரவ விரிவுரையாளர் பேராசிரியர் ஆறுமுகத் தமிழன், ''ஆதி மனிதன் ஒரு பழத்தை சாப்பிட்டு விட்டு கீழே போடுகிறான். சில நாட்களில் அங்கு செடி முளைக்கிறது. எதனால் முளைத்தது என தெரியாமல், உச்சி வெயில் வேளையில் மீண்டும் ஒரு கொட்டையை போடுகிறான். ஆனால், செடி முளைக்கவில்லை. எதனால் இந்த முரண்பாடு என்ற காரணத்தைத் தேட துவங்கினான். இதனால் நமக்கு நன்மை கிடைக்குமா? என யோசித்தான். தேடலில் முடிவில் பயிர் தொழிலுக்கான தத்துவங்கள் பிறந்தன.
 
'ஒருவன் சுரண்டுகிறான். மற்றொருவன் சுரண்டப்படுகிறான்' இதை சரி செய்ய என்ன பண்ணலாம் என மார்க்ஸ் தேடியதால்தான் 'எல்லாரும் சமம்' என்ற தத்துவம் வந்தது. இதற்கு எதிர்வினையாற்ற 'எனக்கு திறமை உள்ளது. முதலீடு இருக்கிறது சம்பாதிக்கிறேன்' என்ற வலதுசாரிகள், 'வல்லமை உள்ளவன் வாழ்வான்' என்ற தத்துவத்தை கண்டுபிடித்தார்கள். 
 
'நோஞ்சான் குழந்தைக்கு கூடுதல் சோறு. ஆரோக்கியமான குழந்தைக்கு குறைந்த சோறு' என்ற தாயின் செயலில் தான் சமூகநீதி தத்துவம் உருவானது. சமயமும் தத்துவமும் வேறு வேறாக இருந்தது. சமயத்திற்கு தனித் தலைவர்களும், தத்துவத்திற்கு தனித் தலைவர்களிம் இருந்தார்கள். ஆனால் காலப்போக்கில் சமயமும், தத்துவமும் பின்னிப்பிணைந்து கலவையாகிவிட்டது. 'கடவுள் மட்டுமே உலகில் இருக்கிறார். மனிதன் உட்பட உலகில் உள்ள மற்ற அனைத்தும் கடவுளில் நிழல்தான்' எனக் கூறுகிறது அத்வைத தத்துவம். 'இல்லை இல்லை 'மனிதர்களை கடவுள் தான் படைத்தார்'. 'கடவுள் நம்மை வழிநடத்தி சென்றுக்கொண்டிருக்கிறார் என்பதால் யாரும் தவறான வழிக்கு செல்ல வேண்டாம்' என அத்வைத தத்துவத்தை மறுத்து உருவானது சைவசித்தாந்த தத்துவம்.
 
சமயத்திற்குள் உள்ள தத்துவ மறுப்பு போட்டியால் சண்டைகள் உருவானது. இதனால்,' கடவுளே இல்லை. அனைத்தும் கல் மற்றும்  சித்திரம்தான்' எனக் கூறி உருவானது 'சார்வாகம்' தத்துவம். பெரியார் பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்த தத்துவம் தோன்றியது. 
 
'சமூகத்தில் நடக்கும் பிரச்னைகளை உனக்குள் அணுகு' என்கிறது உலக சமய தத்துவங்கள். 'உனக்கான சுய தேவையை உணர்ந்து செயல்படு' என சமய தத்துவங்கள் அறியுறுத்துகிறது. அதனால்தான் உணவு இல்லாதவன், உணவுவை அதிகம் வைத்துள்ளவனிடன் சண்டையிட்டு உணவை பெறுவதில்லை. இதற்கு பதிலாக பட்டினியுடன் இருக்க பழகுவதற்காக பிரதோஷம், சனிக்கிழமை விரதம் என கடவுள் மீது பழிபோட்டு விரதம் இருக்கிறார்கள்.
 
ஒரு தத்துவத்தை உடைக்க இரண்டு தத்துவமும், அதை உடைக்க பல தத்துவங்களும் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. தத்துவங்களுக்கு முடிவே இல்லை'' என்கிறார்.
 
தோன்றிக்கொண்டே இருப்பதுதான் தத்துவமோ..!?
 
-ஆ.நந்தகுமார்

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

நன்றி மறக்காத ஜெயலலிதா...! - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 8
placeholder

சசிகலா. ரத்த உறவு ஏதும் இல்லை; மைசூருவில் உடன் விளையாடியவரும் இல்லை; சர்ச் பார்க்கில் உடன் படித்தவரும் இல்லை; சாதாரணமாக திரைப்பட கேசட் வாடகைக்கு விட்டுக்கொண்டிருந்தவர்... அவ்வளவுதான்..! அவர் எப்படி இந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு நெருக்கமானார்... அவர் எப்படி தமிழ்நாட்டின் ஓர் அதிகார மையம் ஆனார்... அவரின் ஆசி கிடைத்துவிட்டால்போதும், எந்த உச்சத்தையும் தொடலாம் என்ற அளவுக்கு அவர் எப்படி உயர்ந்தார்...? அவர் குடும்பத்தால் தனக்குக் கெட்ட பெயர் என்று தெரிந்தபின்னும், அவரை முற்றும் முழுவதுமாக ஜெயலலிதா கைவிட மறுப்பதன் காரணம் என்ன...? சோ முதல் சுப்பிரமணிய சுவாமி வரை, எவ்வளவோ முயற்சித்துவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் நட்பைப் பிரிக்க முடியவில்லை என்ன காரணம்...? இதற்கான விடையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், ஜெயலலிதாவைப் புரிந்துகொள்ள வேண்டும். அவரைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அவர் பள்ளிக் காலத்தில் நடந்த சம்பவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

MUST READ