Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கமல் ராசிக்காரர்களுக்கு அடுத்த சாதனை என்ன? ஐஸ்வர்யா ராய் ராசிக்காரர்களுக்கு ஐஸ்வர்யம் உண்டாகுமா?


 
கமலின் மீனம் ராசிக்காரர்களே...

உங்களுக்கு துர்முகி ஆண்டு சாதனை ஆண்டாக இருக்குமா எனப் பார்ப்போம்.


பிறர் கஷ்டங்களைத் தனதாகக் கருதும் பண்பாளரான உங்கள் ராசிக்கு,  சுக ஸ்தானத்தில் துர்முகி வருடம் பிறந்துள்ளதால், கனவுகள் நனவாகும். தள்ளிப்போன காரியங்கள் விரைந்து முடிவடையும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். தாய்வழி சொத்து கைக்கு வரும்.

வருடம் முழுவதும் ராகு உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டிலேயே தொடர்வதால், பிரச்னைகள் வெகுவாக குறையும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். புது பதவிகள் தேடி வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். வழக்கு சாதகமாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அயல்நாட்டில் இருக்கும் நண்பர்களால் ஆதாயம் அடைவீர்கள். கேது ராசிக்கு 12-ல் மறைந்திருப்பதால், வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.     

 01.8.16 வரை உங்கள் ராசிநாதன் குரு ராசிக்கு 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால், சில வேலைகளை போராடி முடிப்பீர்கள். வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். 02.08.16 முதல் 16.01.17 வரை மற்றும் 10.03.17 முதல் 13.04.17 வரை குரு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால், உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் உண்டாகும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதியவரின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். ஆனால், 17.01.17 முதல் 09.03.17 வரை குரு அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 8-ல் அமர்வதால், குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வீண் அலைச்சல்கள் அதிகமாகும். சிலர், உங்களைப் பற்றிய தவறான வதந்திகளைப் பரப்புவர்; பொறுமை அவசியம்.
 
இந்த வருடம் முழுவதும் சனி ராசிக்கு 9-ல் நிற்பதால், மற்றவர் களால் செய்ய முடியாத காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். மதிப்பு கூடும். பழைய பிரச்னைகள், சிக்கல்களுக்குத் தீர்வு காண்பீர்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். ஆனால், தந்தையுடன் வாக்குவாதம், அவருக்கு நரம்புச் சுளுக்கு, மூட்டுத் தேய்மானம், சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்து போகும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை விஸ்வரூபமெடுக்கும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும்.

இந்தப் புத்தாண்டு செவ்வாய், சுக்ரன், புதன் ஆகிய கிரகங்கள் சாதகமாக இருக்கும் நேரத்தில் பிறப்பதால், செயலில் வேகம் கூடும். கலை, இலக்கியத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் கோபம் குறையும். வியாபாரத்தில் இழப்புகளைச் சரி செய்வீர்கள். மாறுபட்ட அணுகு முறையால் லாபம் ஈட்டுவீர்கள். தள்ளிப்போன ஒப்பந்தம் கூடிவரும்.சிலர் சொந்த இடத்துக்கே கடையை மாற்றுவீர்கள். பதிப்பகம், போர்டிங், லாட்ஜிங், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் லாபம் அடைவீர்கள். வைகாசி, ஆவணி, தை, மார்கழி மாதங்களில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். 02.08.16 முதல், உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு.தடைப்பட்டிருந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மூத்த அதிகாரிகள் முக்கியத்துவம் தருவர். வைகாசி, ஆவணி, தை மாதங்களில் புது பொறுப்புக்கும், பதவிக்கும் உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும்.

மாணவ-மாணவிகளுக்கு, படிப்பில் முன்னேற்றம் உண்டு. தேர்வில் எதிர்பார்த்தபடி மதிப்பெண் வர வாய்ப்பு உண்டு. விரும்பிய கல்விப் பிரிவில் சேருவீர்கள். கலைத் துறையினருக்கு, அரசு விருது உண்டு. பெட்டிக்குள் முடங்கிய படம் ரிலீசாகும். வர வேண்டிய சம்பள பாக்கி கைக்கு வந்து சேரும். பெரிய நிறுவனங்கள் உங்களை அழைக்கும்.
மொத்தத்தில் இந்த துர்முகி வருடம், அனைத்திலும் உங்களை வெற்றி பெற வைப்பதுடன், பணம், பதவியையும் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம் : ஏகாதசி தினங்களில், திருச்சி மாவட்டம், உத்தமர் கோவிலுக்குச்  சென்று,  ஸ்ரீபுருஷோத்தமனை தரிசித்து வணங்கி வாருங்கள். நன்மைகள் கூடும்.
 
பஞ்ச் :

* கனவுகள் நனவாகும்.(ஆக்கிடுவீங்கல்ல...)
* சில வேலைகளை போராடி முடிப்பீர்கள்.(போராட்டம் நமக்கு அல்வா சாப்பிடற மாதிரில்ல..)
* மற்றவர்களால் செய்ய முடியாத காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள் (அதானே பிளஸ்...)
* சொத்துப் பிரச்னை விஸ்வரூபமெடுக்கும் (மறுபடியுமா...)
* பெட்டிக்குள் முடங்கிய படம் ரிலீசாகும்.(மருதமலை ஆண்டவரை கும்பிடுவோம்...)
 
 
ஐஸ்வர்யா ராயின் தனுசு ராசிக்காரர்களே...

உங்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகுமா எனப் பார்ப்போம்.

முயற்சியை எப்போதும் கைவிடாதவர் நீங்கள்! உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் சந்திரன் இருக்கும்போது, புது வருடம் பிறந்துள்ளதால், உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். தடைப்பட்டு வந்த திருமணம் உடனே முடியும். கணவன் - மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் கூடும்.
வருடம் பிறக்கும்போது சுக்ரனும் புதனும் சாதகமாக இருப்பதால், கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப் பற்றாக்குறையைப் போக்க கூடுதலாக உழைப்பீர்கள். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். பழைய கடன் பிரச்னை தீரும்.


01.08.16 வரை உங்கள் ராசிநாதன் குரு பகவான் 9-ல் நிற்பதால், பிரச்னைகளைத் தீர்க்கும் சூட்சுமத்தை உணர்வீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். எதிரிகளும் நண்பர்களாவார்கள். ஆனால்,02.08.16 முதல் 16.01.17 வரை மற்றும் 10.03.17 முதல் 13.04.17 வரை குரு 10-ம் வீட்டில் நுழைவதால், சில ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். உங்களின் திறமையையும் உழைப்பையும் மற்றவர்கள் பயன்படுத்திக்கொள்வர். எந்த விஷயத்தையும் நீங்களே நேரடியாக முடிக்கவும்.

ஆனால், 17.01.17 முதல் 9.03.17 வரை குரு பகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 11-ல் அமர்வதால், அடிப்படை வசதி, வாய்ப்புகள் பெருகும். சுபகாரியங்கள் நடைபெறும். தாயின் ஆதரவு அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் இடம் உண்டு. மூத்த சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வருடம் முழுவதும் ராகு பகவான் 9-ம் வீட்டிலேயே தொடர்வதால், தன்னம்பிக்கை பிறக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். வீடு கட்ட, தொழில் தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். தந்தைக்கு ரத்த அழுத்தம், கை, கால் வலி வந்து போகும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை தலைதூக்கும். தந்தையாருடன் மனத்தாங்கல் வரும். செலவுகளும் அதிகரிக்கும். பாகப்பிரிவினை பிரச்னையில் இப்போது தலையிட வேண்டாம்.

ஆனால், கேது 3-ம் வீட்டிலேயே நீடிப்பதால், தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. இளைய சகோதர வகையில் பிணக்குகள் நீங்கும். பங்குச் சந்தை மூலமாக பணம் வரும். கௌரவப் பதவிகள் வரும். வருடம் முழுவதும் விரயச் சனி தொடர்வதால், மனச் சஞ்சலம் உண்டாகும். எந்த ஒரு வேலையையும் போராடி முடிக்கவேண்டி வரும். வீண் அலைச்சல்கள் அதிகரிக்கும். நண்பர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளை நீங்களே முன்னின்று நடத்துவீர்கள். திடீர்ப் பயணங்கள் உங்களை அலைக்கழிக்கும். ஒரு சிக்கல் தீர்ந்தது என்று நினைக்கும்போது புதிதாக மற்றொரு சிக்கல் ஏற்படும்.
வியாபாரத்தில், வாடிக்கையாளர்களின் ரசனைகளுக்கு ஏற்ப முதலீடு செய்வது நல்லது. ஏற்றுமதி - இறக்குமதி, கெமிக்கல், பிளாஸ்டிக் வகைகளால் லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்பர். கடையை வேறு இடத்துக்கு மாற்று வீர்கள். வைகாசி, ஆவணி, புரட்டாசி ஆகிய மாதங்களில் லாபம் அதிகரிக்கும்.    


2.8.16 முதல் குரு உங்கள் ராசிக்கு 10-ல் அமர்வதால், உத்தியோகத்தில் பொறுப்பு அதிகமாகும். சக ஊழியர்களில் ஒருசிலர் அவர்களின் வீழ்ச்சிக்கு நீங்கள் காரணம் என்று தவறாகப் புரிந்துகொள்வார்கள். மறைமுக எதிர்ப்புகளும் இருக்கும். சிலருக்கு,  கட்டாய ஓய்வு எடுக்கவேண்டிய சூழலும் உருவாகலாம். அதுவும் நன்மைக்கே! வைகாசி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் அலுவலகத்தில் உங்களின் மதிப்பு கூடும்.


மாணவ-மாணவிகள், ஒரு முறைக்கு பலமுறை படிப்பதும், படித்ததை எழுதிப்பார்ப்பதும் அவசியம்.பெற்றோர் உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். கலைத் துறையினரே! படைப்புகளை வெளியிடுவதில் கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போகவும். வேற்றுமொழி வாய்ப்புகளும் வரும். 
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு உங்களைக் கொஞ்சம் செம்மைப் படுத்திக் கொள்ள உதவுவதுடன், சமூகத்தில் அனுசரித்துப் போகும் கலையை உங்களுக்குக் கற்றுத் தருவதாகவும். அமையும்.
பரிகாரம் : நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயரை, மூலம் நட்சத்திர நாளில், வெற்றிலை மாலை அணிவித்து வணங்கி வாருங்கள். கஷ்டங்கள் குறையும்.
 
பஞ்ச் :

கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள் ( அது ரொம்ப முக்கியமாச்சே..)
உத்தியோகத்தில் பொறுப்பு அதிகமாகும்.(கலக்குங்க...)
மறைமுக எதிர்ப்புகளும் இருக்கும்.(அது இல்லாமலா...)
கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போகவும் (பிரச்னையை தீர்க்க முதல் ஸ்டெப் இதானே...)
 
வெயிட் ப்ளீஸ்...

வைகோ ராசிக்காரர்களுக்கு வளம் சேருமா?
சீமான் ராசிக்காரர்களுக்கு செல்வாக்கு எப்படி?
நாளைக்குப் பார்ப்போமா..!
 
பின்குறிப்பு: ராசி பலனை கணித்தவர் ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன். மேற்கோள் குறிக்குள் சொல்லப்பட்ட விஷயங்களைத் தவிர, இதில் இடம்பெற்ற தலைப்பு, முன்னுரை, பின்னுரை, பஞ்ச் ஆகியவற்றுக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close