Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சஞ்சலம் நீங்க...(இன்று ஒரு தகவல்-5)


புத்தர் ஒரு கிராமத்தில் இருந்தபோது, தம்முடைய சீடர்களிடம் தாகத்துக்குத் தண்ணீர் கொண்டு வருமாறு கூறினார். சீடர்களும் கமண்டலத்தை எடுத்துக் கொண்டு நீரோடைக்குச் சென்றனர். அவர்கள் நீரோடைக்குச் சென்றபோது, அப்போதுதான் ஒருவன் தன்னுடைய மாடுகளை இறக்கி மறுகரைக்கு ஓட்டிச் சென்றான். அதனால், நீரோடை கலங்கி சேறாகிவிட்டது. கலங்கிய நீரை எப்படி குருவுக்கு கொண்டு செல்வது என்று சீடர்கள் தண்ணீர் எடுக்காமல் திரும்பி வந்து, நடந்ததை புத்தர் பிரானிடம் தெரிவித்தனர்.

சற்று பொறுத்து நீரோடைக்குச் செல்லுமாறு கூறினார். புத்தர் கூறியபடியே சற்று பொறுத்து சீடர்கள் நீரோடைக்குச் சென்றபோது நீரோடை தெளிந்து, தண்ணீர் ஸ்படிகம் போல் இருந்தது. சீடர்கள் மகிழ்ச்சியுடன் தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து புத்தர் பிரானிடம் தந்தனர்.

அப்போது புத்தர், ''நம்முடைய மனதிலும்கூட அவ்வப்போது தேவையற்ற எண்ணங்கள் தோன்றி நம்மைக் குழப்பிவிடும். அப்போது நாம் சலனப்படாமல் பொறுமையுடன் இருந்தால், போகப் போக தெளிந்து அமைதி அடைந்துவிடும்'' என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ