Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சர்ச்சை எதற்கு? (இன்று ஒரு தகவல்-6)

ஒரு கிணற்றில் தவளை ஒன்று வசித்து வந்தது. அந்தத் தவளைக்கு அந்தக் கிணறுதான் உலகம்.

ஒருநாள் கடலில் வசித்து வந்த தவளை ஒன்று வழி தவறி வந்து அந்தக் கிணற்றுக்குள் விழுந்துவிட்டது. கடல் தவளையைக் கண்ட கிணற்றுத் தவளை, ''நீ எங்கிருந்து வருகிறாய்?'' என்று கேட்டது. ''நான் கடலில் இருந்து வருகிறேன்'' என்றது கடல் தவளை. கிணற்றுத்தவளை கிணற்றுக்குள் ஒரு தாவு தாவி, 'உன் கடல் இவ்வளவு பெரியதாக இருக்குமா?'' என்று கேட்டது. கடல் தவளை, ''இல்லை. கடல் ரொம்பப் பெரியது'' என்றது. கிணற்றுத் தவளை கிணற்றின் ஒரு பக்கத்தில் இருந்து மறு பக்கத்துக்குத் தாவி, ''உன்னுடைய கடல் இவ்வளவு பெரியதாக இருக்குமா?'' என்று கேட்டது. கடல் தவளை, ''இந்தக் கிணற்றை விடவும் ரொம்ப ரொம்ப பெரியது. உன்னுடைய கிணற்றைப் போல் கோடி கிணறுகள் சேர்ந்தாலும் கடலுக்கு சமம் ஆகாது என்றது கடல் தவளை. உடனே கிணற்றுத் தவளைக்குக் கோபம் வந்து, ''நீ பொய் சொல்கிறாய். என்னுடைய கிணறுதான் ரொம்ப பெரியது. நீ இங்கிருந்து போய்விடு'' என்று சொல்லி கடல் தவளையைத் துரத்தி விட்டது.


நாம் கூட அந்தக் கிணற்றுத் தவளையைப் போல்தான் இருக்கிறோம். நம்முடைய மதம்தான் பெரியது என்று வாதிடுகிறோம்.உண்மையில் ஒவ்வொரு மதமும் உயர்ந்தவைதான். எனவே மதங்களைப் பற்றிய சர்ச்சை தேவையே இல்லை.


-சுவாமி விவேகானந்தர்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close