Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மனிதருக்கு மதங்கள் அவசியமா? ( இன்று ஒரு தகவல்)

மனித மனதைப் பண்படுத்தி அவர்களின் ஆன்மிக சாதனைகளுக்கு துணை புரிவது என்ற வகையில் மதம் என்பது மனிதருக்கு அவசியம்தான். ஆனால், தன்னுடைய மதம்தான் உயர்ந்தது என்ற எண்ணம் மட்டும் இருக்கக்கூடாது.

நீங்கள் இப்போது ஓர் இந்துவாக இருக்கலாம்; ஒரு கிறிஸ்தவராக இருக்கலாம்; ஓர் இஸ்லாமியராகவும் இருக்கலாம். நீங்கள் பிறக்கும்போதே ஒரு குறிப்பிட்ட மதத்தில்தான் பிறக்கிறீர்கள். அதன்பிறகு அதன் கோட்பாடுகளைப் பின்பற்ற ஆரம்பித்தீர்கள். இவையெல்லாமே உங்களுடைய உலக வாழ்க்கை நடைமுறைகளுக்குத்தான்.

உங்களையே நீங்கள் உணர்ந்து ஆத்ம விசாரணை செய்யத் தொடங்கிவிட்டால், பிறகு மதங்களோ அவற்றின் கோட்பாடுகளோ உங்களுக்குத் தேவையில்லை. ஆனால், அந்த நிலையை அடையும்வரை, உங்கள் மதக் கோட்பாடுகளில் முழு நம்பிக்கை வைத்து நீங்கள் நடக்கவேண்டும்.

எல்லா மதங்களுமே இறைவனை அடையும் வழியைத்தான் காட்டுகின்றன. உங்கள் மதக் கோட்பாடுகளில் நீங்கள் முழு நம்பிக்கை வைத்திருந்தால், அதுவே உங்களுடைய ஆன்மிக சாதனைகளில் உரிய பயனை அடையப் போதுமானதாக இருக்கிறது.

- சுவாமி விவேகானந்தர்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ