Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆரூரா தியாகேசா முழக்கங்களுடன் திருவாரூர் ஆழித்தேரோட்டம்! -பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிப்பு

 திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டத்தில் ஆரூரா தியாகேசா முழக்கங்களுடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
 
திருவாரூர் தேரழகு என்பது பழமொழி. 96 அடி உயரமும், 31 அடி அகலமும், 350 டன் எடையும் கொண்ட ஆழித்தேர், அசைந்து அசைந்து வருவதை காண கண்கோடி வேண்டும் என்பார்கள். ஆண்டுதோறும் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவுக்குப் பின் ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

கடந்த 2010 ஆம் ஆண்டு தேரோட்டத்துக்குப் பிறகு, தேர் பிரிக்கப்பட்டு புதிய தேர் கட்டப்பட்டு கடந்த 2015 அக்டோபர் 26-ம் தேதி வெள்ளோட்டம் நடத்தப்பட்டது.

நேற்று (புதன்கிழமை) விநாயகர், சுப்பிரமணியர் தேரோட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து, 5 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (16-ம் தேதி) காலை 7 மணிக்கு திருவாரூர் சன்னதி தெரு எதிரே அமைந்துள்ள தேரடியிலிருந்து ஆழித்தேரோட்டம் தொடங்கியது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆருரா, தியாகேசா என்று விண்ணதிரும்படி எழுப்பிய பக்தி முழக்கத்துடன் ஆழித்தேரை வடம் பிடித்தனர்.

ஆழித்தேர் தெற்குவீதி, மேற்குவீதி, வடக்கு வீதி, கீழவீதிகளில் அலங்கார தொம்பைத்துணி அசைந்தாட வந்த ஆழித்தேரை பக்தர்கள் மெய்சிலிர்க்கத் தரிசனம் செய்தனர். அதிர்வேட்டுகளும், ஆரூரா தியாகேசா முழக்கங்களும் ஒலிக்க நான்கு வீதிகளிலும் ஆழித்தேர் வலம் வந்தது.

- செய்தி, படங்கள்: க‌.சதீஷ்குமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ