Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமர்நாத் யாத்திரையில் இதுவரை 71 ஆயிரம் பக்தர்கள் வழிபாடு!



மர்நாத் ஆன்மிக யாத்திரை ஆண்டுதோறும் ஜம்மு-காஷ்மீர் அரசால் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான அமர்நாத் ஆன்மிக யாத்திரை ஜம்மு-காஷ்மீர் துணை முதல்வர் நிர்மல் சிங் முன்னிலையில், கடந்த 2 ம் தேதி தொடங்கியது. முதல் நாள் முதல் குழுவாக ஜம்முவில் உள்ள பகவதி நகர்யாத்ரா நிவாஸில்லிருந்து, அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க ஆயிரத்து 282 பேர் 13 பேருந்துகள், 24 மினி பேருந்துகளில் புறப்பட்டு சென்றனர்.

கடந்த புதன் கிழமை மட்டும், 15 ஆயிரத்து 185 பக்தர்கள் வழிபாடு நடத்தி உள்ளனர். இதில் தெற்கு காஷ்மீரில் இருந்து ஆயிரத்து 262 ஆண்கள், 359 பெண்கள் என ஆயிரத்து 621 பக்தர்கள், 49 வாகனங்களில் பகவதி நகர் முகாமில் இருந்து புதன்கிழமை யாத்திரையாகச் சென்றனர்.

 

அமர்நாத் யாத்திரை தொடங்கி கடந்த 5 நாட்களில், அமர்நாத் குகைக் கோயிலில் பனிலிங்கமாக காட்சி தரும் சிவபெருமானைத் தரிசிக்க 71 ஆயிரத்து 103 பக்தர்கள் இதுவரை வழிப்பட்டுச் சென்றுள்ளனர். இந்தியா மட்டுமின்றி, பல வெளிநாடுகளில் இருந்தும் இதுவரை இல்லாத வகையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்திருப்பதாகக் கோயில் நிர்வாகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியிருக்கிறார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே தீவிரவாத தாக்குதல் அதிகரித்திருப்பதாலும், அமர்நாத் செல்லும் வழியில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதாலும், பக்தர்களுடன் பாதுகாப்பாக துணை ராணுவத்தினர் உடன் சென்று வருகிறார்கள். குறிப்பாக வழக்கத்தை விட இந்த ஆண்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ