Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காணிக்கை முடியில் கை வைத்த கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் கைது!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ளது, இருக்கன்குடி மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.  இந்தக் கோயிலின் பரம்பரை பூசாரிகள், இந்தக் கோயிலை நிர்வகித்து வருகின்றனர். இந்து அறநிலையத்துறை, கோயில் நிர்வாகம் உள்ளிட்ட மற்ற விஷயங்களை கண்காணித்து வருகிறது. பரம்பரை அறங்காவலர் குழுத் தலைவராக இருப்பவர் ராமமூர்த்தி. யார் பரம்பரை கோயில் அறங்காவலர் குழுத் தலைவராக இருப்பது என்பதில் ராமமூர்த்தி மற்றும் அவரது உறவினர்களுக்குள் மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில் இருக்கன்குடி கோயிலில், லட்சக்கணக்கான பக்தர்கள் மொட்டையடித்து காணிக்கையாக செலுத்தியிருந்த முடிகள், மூட்டை மூட்டையாக கோயில் வளாகத்திற்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

சமீபத்தில் முடி காணிக்கை மூட்டைகளில் இருந்து, ரூ.60 லட்சம் மதிப்புள்ள 15 முடி மூட்டைகள் திருடு போயின. இது தொடர்பாக இந்து அறநிலையத்துறையின் செயல் அலுவலர் ஹரிகரன், இருக்கன்குடி போலீசில் புகார் செய்தார். போலீசாரின் விசாரணையில், இந்து அறநிலையத்துறையை சேர்ந்த வாட்ச்மேன்கள் சுந்தர், ஈஸ்வரன் ஆகியோர் முடி மூட்டைகள் திருட்டு போனதற்கு உடந்தையாக இருந்ததாகவும், கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., கேமராக்களை திருட்டு சம்பவம் நடந்த   நாளையொட்டி பழுதாக்கி வைத்திருப்பதற்கு இந்து அறநிலையத்துறையின் என்ஜினியர் சேவற்கொடியோன் உடந்தையாக இருந்ததாகவும் தெரியவந்தது.

மேலும் முடி மூட்டைகள் திருடுப் போன சம்பவத்திற்கு அறங்காவலர் குழுத்தலைவரான ராமமூர்த்திதான்  மூளையாக செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இந்து அறநிலையத்துறை ஊழியர்களான என்ஜினியர் சேவற்கொடியோன், சுந்தர், ஈஸ்வரன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, இந்த திருட்டு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தியை இருக்கன்குடி போலீசார் கைது செய்தனர்.

செய்தி: எம்.கார்த்தி
படம்: ஆர்.எம்.முத்துராஜ்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close