Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமர்நாத் யாத்திரை 2 வது முறையாக மீண்டும் நிறுத்தம்!


ம்மு-காஷ்மீர் பகுதியில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக, கடந்த ஏழு நாட்களில் 2 வது முறையாக அமர்நாத் யாத்திரை மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இமயமலையில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலில், ஆண்டு தோறும் ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சிவபெருமான் பனிலிங்க வடிவில் தரிசனம் தந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த மாதங்களில் குறிப்பிட்ட 48 நாட்களைத் தவிர்த்து,  மற்ற நாட்களில் வருடம் முழுவதும் இக்கோயில் பனியால் மூடப்பட்டே இருக்கும். பனி இல்லாத இந்தக் குறிப்பிட்ட கால இடைவேளையில் மட்டுமே சிவ தரிசனம் கிடைக்கும் என்பதால், பனிலிங்கமாக காட்சி தரும் சிவபெருமானைத் தரிசிக்க, கடந்த 2 ம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்கியது. அடுத்த மாதம் ஆகஸ்ட் 18 ம் தேதி வரை இந்த யாத்திரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம், ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் தளபதியான பர்ஹான் வானி, ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து அங்கு ஏற்பட்ட கலவரம் காரணமாக, கடந்த 9-ம் தேதி அமர்நாத் யாத்திரைக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது. பின்னர், கடந்த 11- ம் தேதி யாத்திரைக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் அசாதாரண சூழல் நிலவுவதாக அம்மாநில அரசு தெரிவித்தது.

இதனையடுத்து பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, மீண்டும் இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக அமர்நாத் யாத்திரைக்கு,  தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அமர்நாத் யாத்திரை தொடர்பான எந்த வாகனமும் அனுமதிக்கப்படவில்லை. யாத்திரைக்காக ஜம்மு-காஷ்மீர் வந்த பக்தர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர்.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close