Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆந்திராவில்..  இலவச திவ்ய தரிசன ஆன்மிக சுற்றுலா!

ஆந்திர மாநிலத்தில் பின்தங்கிய மக்களிடையே ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், திவ்யதரிசன சுற்றுலா அழைத்துச்செல்ல ஆந்திர இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.

ஆந்திராவில் வாழும் எஸ்சி, எஸ்டி, மிகவும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த ஏழை மக்களைக் கவரும் வகையிலும், அவர்களிடம் ஆன்மிகத்தை ஆழமாக வளர்க்கும் நோக்கிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளன. அதனால் ஸ்ரீசைலம், திருமலை, விஜயவாடா, மங்களகிரி உள்ளிட்ட கோயில்களுக்கு இலவசமாக 'திவ்யதரிசன சுற்றுலா' அழைத்துச்செல்ல ஆந்திர இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.

அனைவரும் 'திவ்யதரிசன சுற்றுலா' செல்ல ஏற்ற வகையில், ஆந்திராவில் உள்ள மாவட்டங்கள் அனைத்தும் மண்டலம் வாரியாக முதலில் பிரிக்கப்படும். அதன் பிறகு, அதில் ஒரு மண்டலத்திற்கு 200 பேர் முதல், 250 பேர் வரை தேர்ந்தேடுக்கப்பட்டு ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் வகையில் முதற்கட்டமாகத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இத்திட்டத்தின் மூலம் ஆன்மிக சுற்றுலா செல்லும் அனைவருக்குமான உணவு, தங்கும் இடம், தரிசனம் உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் அரசு ஏற்றுக்கொள்கிறது. இத்திட்டம் தொடர்பான வேலைகள் மற்றும் ஆலோசனைகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால், இம்மாத இறுதிக்குள் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வசதி படைத்தவர்கள் மட்டுமே ஆன்மிக சுற்றுலாக்கள் சென்று வந்துகொண்டிருக்கும் இன்றைய நிலையில், வசதியற்ற பக்தர்களையும் இலவசமாக ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்ல, ஆந்திர அரசு முன்வந்துள்ளது பின்தங்கிய மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ