Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தினம் தினம் திருநாளே!


அசுவினி

வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உறவினர்கள் நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். லாபகரமான செயல்களில் ஈடுபடுவீர்கள். அலுவலகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும்.

பரணி

மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். . விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள்.

கிருத்திகை

எதிர்பாராத செலவுகளால் பண நெருக்கடி ஏற்படும். வீண் செலவுகளும் அதிகரிக்கும். காரிய தாமதம் ஏற்படும். வெளியில் செல்லும்போது கைப்பொருட்கள் தொலைந்துபோகக்கூடும் என்பதால் கூடுதல் கவனம் தேவை. மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய்து அவசியம்.

ரோகிணி

அதிகாரிகள் சந்திப்பும் அவர்களுடன் கருத்துவேறுபாடும் ஏற்படக்கூடும். வீண் அலைச்சல் உண்டாகும். நேரத்துக்கு சாப்பிடமுடியாது. தசாபுக்தி சாதகமாக இருப்பவர்களுக்கு முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். சிலருக்கு பிற்பகலுக்கு மேல் தலைவலி வரக்கூடும். கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது நல்லது.

மிருகசீரிடம்

இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். பணத் தேவை அதிகரிக்கும் என்பதால் ஒருசிலர் கடன்படவும் நேரும். குடும்பத்தில் மற்றவர்களுடன் பேசும்போது அனுசரணையாக நடந்துகொள்ளவும். இன்று நீங்கள் துர்கையை வழிபடுவது நலம் சேர்க்கும்.
 .
திருவாதிரை

இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். அரசு அதிகாரகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு.

புனர்பூசம்

எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். புது முயற்சிகளில் இறங்காமல் இருப்பதுடன், வழக்கமான பணிகளையும் கூடுதல் கவனத்துடன் செய்யவும்.  பொருட்கள் களவு போகக்கூடிய வாய்ப்பு உள்ளதால் மிகவும் கவனம் தேவை. வீண் வாக்குவாதங்கள், வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். இன்று நீங்கள் முருகனை வழிபட்டால் சிரமங்கள் குறையும்.

பூசம்

உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். மற்றவர்களால் மன அமைதி குறையக்கூடும். குடும்பத்தில் மனைவி மற்றும் பிள்ளைகளை அனுசரித்து நடந்துகொள்ளவும். சிலர் வெளியூர்ப் பயணம் செல்லநேரிடும். ஒருசிலருக்கு எப்போதோ தொலைத்த பொருள் கிடைக்கும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

ஆயில்யம்

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். . வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்திகள் வந்து  மகிழ்ச்சியில் ஆழ்த்தும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும்.

மகம்

எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும்.. பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். இருந்தாலும் இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் அலைச்சல் இருக்கும். .

பூரம்

மனதில் இனம் தெரியாத மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். ஒரு சிலருக்கு வியாபாரத்தின் நிமித்தமாகவோ பணியின் காரணமாகவோ வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். எதிர்பாராத பொருள்வரவு உங்களை சந்தோஷப்படுத்தும்.. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள்.

உத்திரம்

தகாத நண்பர்களின் சேர்க்கையால் தேவையற்ற பிரச்னைகளில் சிக்கிக்கொள்ள நேரிடும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. வீண் செலவுகள் உண்டாகும். காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும்.. மற்றவர்களுடன் வீண்மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும்.

அஸ்தம்

அரசு அதிகாரிகளுடன் கருத்துவேறுபாடும் மனக் கசப்பும் உண்டாகும். வீண் அலைச்சல் உண்டாகும். நேரத்துக்கு சாப்பிடமுடியாது. சிலருக்கு முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். சிலருக்கு பிற்பகலுக்கு மேல் ஆரோக்கியம் சற்றே பாதிக்கப்படக்கூடும். விநாயகருக்கு தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

சித்திரை

இன்று வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள மற்றவர்களிடம் கடன் வாங்கவேண்டிய நிலை உண்டாகும். . இன்று நீங்கள் விநாயகருக்கு அறுகம்புல் அர்ச்சனை செய்து வழிபடுவது நன்மை தரும்.

சுவாதி

சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் உண்டாகும்.  அரசு அதிகாரகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு.

விசாகம்

எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். புது முயற்சிகளில் இறங்காமல் இருப்பதுடன், வழக்கமான பணிகளையும் கூடுதல் கவனத்துடன் செய்யவும்.  பொருட்கள் களவு போகக்கூடிய வாய்ப்பு உள்ளதால் மிகவும் கவனம் தேவை. வீண் வாக்குவாதங்கள், வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். கோயிலுக்குச் சென்று ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து வழிபடவும்.

அனுஷம்

உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. தேவையற்ற எண்ணங்களால்  மனதில் கவலை உண்டாகும்..வெளியிடங்களுக்குச் செல்லும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். அறிமுகம் இல்லாதவர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும் என்பதால் கவனமாக இருக்கவும்.

கேட்டை

அரசாங்க காரியங்கள் அனுகூலமாகும். தொலை தூரத்தில் இருந்து வரும் நல்ல செய்திகள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் சிறிது தாமதமாகவே நிறைவேறும். அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று சிவபெருமானை வழிபடவும்.

மூலம்

எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். வீட்டில் சுபநிகழ்ச்சி நிச்சயமாகும்  

பூராடம்

மனதில் இனம் தெரியாத மகிழ்ச்சி உண்டாகும். அதனால் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு.. மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள்.

உத்திராடம்

வீண் செலவுகள் உண்டாகும். தகாத நண்பர்களின் சேர்க்கையால் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் வீண்மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று வழிபடுவதால் நன்மை உண்டாகும்

திருவோணம்

சிலருக்கு வீண் அலைச்சல் உண்டாகும். நேரத்துக்கு சாப்பிடமுடியாதபடி வேலைச் சுமை இருக்கும். சிலருக்கு முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும்.  பிற்பகலுக்கு மேல் சிலருக்கு லேசான சிறு அளவில் உடல்நலக்குறைவு உண்டாகும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நலம் சேர்க்கும்.

அவிட்டம்

புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். தேவைக்கேற்ப பணம் கையில் இருக்காது. . மற்றவர்களுடன் வீண்மனஸ்தாபம் உண்டாக வாய்ப்பு உள்ளது.  இன்று நீங்கள் விநாயகப் பெருமானை வழிபடுவது உகந்தது.

சதயம்

இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். அரசு அதிகாரிகளால் நடக்கவேண்டிய காரியங்கள் தடையில்லாமல் முடியும். சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு.

பூரட்டாதி

எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். புது முயற்சிகளில் இறங்காமல் இருப்பதுடன், வழக்கமான பணிகளையும் கூடுதல் கவனத்துடன் செய்யவும்.  பொருட்கள் களவு போகக்கூடிய வாய்ப்பு உள்ளதால் மிகவும் கவனம் தேவை. வீண் வாக்குவாதங்கள், வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். கோயிலுக்குச் சென்று சனிபகவானுக்கு எள்ளெண்ணெய் தீபம் ஏற்றவும்.

உத்திரட்டாதி

உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. தேவையற்ற எண்ணங்களால் மனதில் இனம் தெரியாத கலக்கம் உண்டாகும். மற்றவர்களால் மன அமைதி குறையக்கூடும். அலுவலகத்தில் உங்களுடைய பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும்.இன்று நீங்கள் விநாயகர் அகவல் பாராயணம் செய்துவிட்டு உங்கள் வேலைகளைத் தொடங்குவது நல்லது.

ரேவதி

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் நடைபெறும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும்.
         

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.

MUST READ